யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா விமர்சனம்
இந்திரலோகத்தில் நா.அழகப்பன்
- மு.பெருமாள்
azhagappan
FE
இம்சை அரசன் வெற்றியை தொடர்ந்து, அதை விடவும் மிக அதிகமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். ஆனால் தான் விருப்பப்பட்ட வேடங்களில் எல்லாம் நடிக்க வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியில் காமெடியை எதிர்பார்த்து வந்த ரசிகர்களை ஏமாற்றியே விட்டார் வடிவேலு.

பூலோகத்தில் கற்சிலையாகி நிற்கும் ரம்பைக்கு அழகப்பன் (வடிவேலு) மாலையிட, திடீர் என உயிர்பெறும் ரம்பை அவரை இந்திரலோகத்துக்கு அழைத்து செல்கிறார்.

அங்கு நடக்கும் அடக்குமுறைகளை கண்டு கொதித்து எழும் அழகப்பன் எமதர்மனையே கொல்ல முயற்சிக்கிறார். இதனால் உண்மை தெரிந்ததும் இந்திரனின் சாபத்துக்கு ஆளாகி 90 வயது கிழவனாகிறார். இந்த சாபத்திலிருந்து அழகப்பன் எப்படி மீண்டு தனது வாழ்க்கையை துவக்குகிறார் என்பது கதை.

மக்களின் உயிரை எம தர்மன் எடுப்பதுதான் வழக்கம். ஆனால் இந்திரலோகம் செல்லும் அழகப்பன் கள்ளச்சாராயத்தை கொடுத்து எமதர்ம ராஜாவையே கொல்ல முயற்சிக்கிறார். மிக அழகாக சொல்லியிருக்க வேண்டிய ஒரு காமெடி கதையை சீரியஸ் காட்சிகளை புகுத்தி சிதறடித்திருக்கிறார் இயக்குனர் தம்பி ராமையா.

நாடக நடிகர் அழகப்பன், இந்திரன் மற்றும் எமதர்ம ராஜா என 3 கெட் அப்களில் வடிவேலு. இது போதாதென்று 90 வயது கிழவன் வேடம் வேறு. அனைத்து வேடங்களையும் கர்ம சிரத்தையாக கையாண்டு வித்தியாசமான நடிப்பாற்றலை வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறார் வடிவேலு. ஆனாலும் ரசிகர்கள் அவரிடம் எதிர்பார்ப்பது 'கைப்புள்ள' காமெடியை தான் என்பதை உணர தவறிவிட்டார்.

காட்சிக்கு காட்சி வடிவேலுவின் முகம், காதை கிழிக்கும் கத்தல்கள் மற்றும் எக்கச்சக்கமான அறிவுரைகள் என சலிப்பை தருகிறது. தியாகு, மனோபாலா, அல்வா வாசு, சுமித்ரா உள்ளிட்ட பலரும் தங்களது பாத்திரம் உணர்ந்து செய்திருக்கின்றனர்.

கதாநாயகி யாமினியை கவர்ச்சிக்காகவே தேடி பிடித்திருப்பார்கள் போல. இது போதாதென்று ஒரு குத்தாட்ட பாடலுக்கு ஸ்ரேயா. வழக்கம் போல் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார் நாரதராக வரும் நாசர்.

படத்தின் பெரும்பகுதி கொட்டாவியை வரவழைத்தாலும் ஒரே ஆறுதல் தோட்டா தரணியின் செட்டிங். ந்திரலோத்தையே கண் முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. சபேஷ்-முரளியின் பின்னணி இசையும், கோபிநாத்தின் ஒளிப்பதிவும் இதற்கு உதவுகின்றன. இன்னும் பல இழுவை காட்சிகளுக்கு ஹர்ஷாவின் படத்தொகுப்பு கத்தரி போட்டிருக்கலாம்.

மிகவும் வித்தியாசமான ஒரு காமெடி ஹிட் கொடுக்க நினைத்து, திரைக்கதையில் கோட்டைவிட்டதால் படு சொதப்பலான ஒரு படத்தை தந்திருக்கிறது தம்பி ராமையா + வடிவேலு கூட்டணி!

'இந்திரலோகத்தில் இம்சை அரசன்!'

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பீமா
பிடிச்சிருக்கு
பிரிவோம் சந்திப்போம்
க‌ல்லூ‌ரி
புலி வருது
மிருகம்
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - தமிழ் திரையுலகை உலக அளவில் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர்களில்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
பீமா
தாதாக்களின் தளபதிகளுக்கு வரும் வாழ்க்கை குழப்பங்களும், மாறுதல்களும் விக்ரமுக்கும் வருகிறது. அவற்றை எப்படி...
பிடிச்சிருக்கு
பிரிவோம் சந்திப்போம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'உடலை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே' என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது என்ன 'பற்களைக் காத்தேன்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace