யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா விமர்சனம்
பீமா
- எஸ்.சரவணன்
Beema
FE
கையில் கத்தியை எடுத்தால் என்னாகும் என்பதை தமிழ் சினிமாவின் பல்வேறு இயக்குனரும், தங்களின் புரிதலுக்கு ஏற்றபடி, அவ்வப்போது பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வரிசையில், பதிவு செய்யப்பட்டிருக்கும் இயக்குனர் லிங்குசாமியின் படை(யெடு)ப்புதான் 'பீமா'!

தளபதி சேகர் (விக்ரம்) துணையுடன் சிட்டியை தனது 'ஆளுமையால் ஆட்டிப்படைக்கும் தாதா சின்னா (பிரகாஷ்ராஜ்) மற்றும் இன்னொரு தாதா ரகுவரன் ஆகியோருக்கு இடையேயான மோதல்கள்... பக்கவாத்தியமாக பயன்படுத்தப்பட்டிருக்கும் போலீஸ் என்கவுன்டர் மற்றும் ரவுடியின் காதல் இவற்றின் கோர்வையே கதையும், திரைக்கதையும்.

தாதாக்களின் தளபதிகளுக்கு வரும் வாழ்க்கை குழப்பங்களும், மாறுதல்களும் விக்ரமுக்கும் வருகிறது. அவற்றை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை திரைக்கதை வேறுபடுத்திக் காட்டுகின்றன.

விக்ரமின் ஆக்ரோஷம் காட்சிக்குக் காட்சி மிளிரவைக்கிறது.காதல் உணர்வை வெளிப்படுத்தும் ரவுடியாகவும், அவர்களுக்கே உரிய நகைச்சுவை உணர்வும் ஆங்காங்கே பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், படம் முழுவதும் விக்ரமுக்கு 'அடி'க்கத்தான் வாய்ப்பு இருக்கிறதே தவிர, நடிக்க அல்ல என்பதே வருத்தம்.

உகந்த காரணத்துடன் ரவுடியை நேசிக்கும் பாத்திரத்தில் த்ரிஷா. காதல் மற்றும் பாடல் காட்சிகளில் படத்துக்குத் தேவையான அளவில் பங்காற்றியுள்ளார்.

பிரகாஷ்ராஜ் மற்றும் ரகுவரன் ஆகியோருக்கு பழைய கதாப்பாத்திரங்கள்தான் என்றாலும், அதில் புதிய ஃப்ளேவரைத் தர முயற்சித்துள்ளார்கள். இவர்களைத் தவிர, படத்தின் கடைசி விறுவிறுப்புக்கு ஷஃபியின் நடிப்பு உறுதுணைபுரிகிறது.

'பீமா'வில் புத்திசாலித்தனமான ஐடியாக்களைத் தூவி, டெம்போவை ஏற்றுவதற்கு இயக்குனர் தவறிவிட்டார். அடிதடி, துரத்தல் என ஓடிக்கொண்டிருப்பது திகட்டவைத்துவிடுகிறது.

கனல் கண்ணனின் சண்டைப்பயிற்சி, ஆர்.டி.ராஜசேகரின் கேமரா ஆகியவற்றின் சுழலில், ஹாரிஸ் ஜெயராஜின் இனிமையான பாடல்கள் மூழ்கிவிட்டன.

ஆளுக்கொரு துப்பாக்கியுடன் எப்போதும் அலைந்துகொண்டிருப்பது, ரவுடிக்கதையில் காவல்துறையின் பங்களிப்பு என அங்கிக்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் 'லாஜிக்' மீறப்பட்டுள்ளன.

இதுபோன்ற மைனஸ்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அதேநேரத்தில், இந்த வகையறா கதைக்கு ரிஸ்க் எடுக்கும் வகையிலான க்ளைமாக்ஸைப் பொருத்தியிருப்பது இயக்குனரின் அசாத்திய துணிச்சலைக் காட்டுகிறது. ஆனால், அதைக் கையாண்ட விதம்தான் தோய்வை ஏற்படுத்தியிருக்கிறது.

மொத்தத்தில், போதுமான அளவில் பிரம்மிப்பை ஏற்படுத்தாதவனாக படைக்கப்பட்டிருக்கிறான் 'பீமா'!
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பிடிச்சிருக்கு
பிரிவோம் சந்திப்போம்
க‌ல்லூ‌ரி
புலி வருது
மிருகம்
பில்லா
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - உலக திரைப்பட வரலாற்றில் ஒரு நடிகைக்கு, ரசிகரால் கோவில் கட்டப்பட்டது என்றால், அந்தப் பெருமைக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
பிரிவோம் சந்திப்போம்
அன்புக்கு ஏங்கி கூட்டுக் குடும்பத்தில் வாழ ஆசைப்படும் நாயகிக்கும், கூட்டுக் குடும்ப வாழ்க்கை தனது திருமண சந்தோஷத்திற்கு...
புலி வருது
மிருகம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace