யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா விமர்சனம்
பிடிச்சிருக்கு
- எஸ்.சரவணன்
Pidichurukku
FE
காதல்... இதன் தேடலும் தேடல் நிமித்தமுமே 'பிடிச்சிருக்கு'!

லாரி புக்கிக் ஆஃபிஸ் ௦நடத்தும் அஷோக்குமாருக்கும், கல்லூரி மாணவி விசாகாவுக்கும் விபத்து ஒன்றின் வாயிலாக காதல் மலர்கிறது. வழக்கம்போல், இந்தக் காதலுக்கும் நாயகியின் தந்தைதான் எதிரி.

மகளின் காதலைத் தெரிந்துகொண்ட தந்தை சம்பத் ராஜு, தனது குடும்பத்தை காலி செய்துவிட்டு வேறு மாநிலம் சென்றுவிடுகிறார்.காதலியைத் தேடி அலையும் நாயகனின் காதல் வெற்றி அடைந்ததா என்பதே மீதக் கதை!

மிகச் சாதாரண காதல் கதை போல் தோன்றினாலும், திரைக்கதையில் இயல்பு மீறாமையும், உணர்வுகளின் பிழறாத பிரதிபலிப்பும், படத்துக்கு அசாதாரண தோற்றத்தை உருவாக்குகிறது.

கதாப்பாத்திரத்துக்கு கச்சிதமான நடிகர்களை தேர்ந்தெடுத்திருப்பது, படத்துக்கு பலமூட்டும் அம்சம். நாயகன் அஷோக்குமார், காதலி விசாகா ஆகியோர் தங்களது எளிமையான தோற்றமும், வசீகரம் நிறைந்த குணாதிசயங்களும் கொண்டு நிறைவாக நடித்துள்ளனர்.

அக்மார்க் தூத்துக்குடி இளைஞனாக நம்மை வசப்படுத்தும் அஷோக்கின் கீச்சுக் குரல் பேச்சுதான் சற்று மைனஸ். ஆனாலும், அது பெரியதொரு பாதகமாகத் தோன்றவில்லை. விசாகா தனது நடிப்பில், இப்படத்தில் நடித்த அனைவரையும் பின்னுக்குத் தள்ள முயன்றுள்ளார்.

அதேபோல், கஸ்டம் ஆஃபீசரான நாயகியின் தந்தையாக வரும் சம்பத்ராஜ், அம்மா சரண்யா, நண்பர் கஞ்சா கருப்பு என படத்தில் அனைவரும் யதார்த்தமான நடிப்பில் திரைக்கதைக்கு வலுவூட்டியுள்ளனர்.

ராமேஸ்வரனின் ஒளிப்பதிவும், மனு ரமேஷின் இசையும் நிரம்பவே 'பிடிச்சிருக்கு'!

முற்பாதியில் அழுத்தம் குறைந்து, காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதால், பிற்பாதியில் சோகம் இழையோடும் காட்சிகள்கூட, காண்போரைக் கலங்கவைக்கவில்லை.

ஆயினும், நேர்த்தியான திரைக்கதை, யதார்த்தம் மிகுந்த குட்டிக் குட்டி குதூகலச் சம்பவங்களின் கோர்வை போன்றவற்றின் மூலம் ரசிகர்களை 'பிடிச்சிருக்கு' என்று சொல்லவைத்துவிட்டார் இயக்குனர் கனகு!
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பிரிவோம் சந்திப்போம்
க‌ல்லூ‌ரி
புலி வருது
மிருகம்
பில்லா
எவனோ ஒருவன்
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - உலக திரைப்பட வரலாற்றில் ஒரு நடிகைக்கு, ரசிகரால் கோவில் கட்டப்பட்டது என்றால், அந்தப் பெருமைக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
பிரிவோம் சந்திப்போம்
அன்புக்கு ஏங்கி கூட்டுக் குடும்பத்தில் வாழ ஆசைப்படும் நாயகிக்கும், கூட்டுக் குடும்ப வாழ்க்கை தனது திருமண சந்தோஷத்திற்கு...
புலி வருது
மிருகம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace