யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா விமர்சனம்
மிருகம்
Padmapriya
FE
எவரும் தீண்டத் தயங்கும் நோயாளிக் கணவனிடம் காட்டும் கனிவு... நடிப்புக் கலையில் பத்மபிரியாவின் அர்ப்பணிப்பு மிளிர்கிறது.

ஐயனாரின் கையாளக வரும் கஞ்சா கருப்பு, ஆத்தாவாக வரும் குரண்டிலட்சுமி அம்மாள் மற்றும் அனைத்து துணைக் கதாப்பாத்திரங்களும் கதையோட்டம் இயல்பு மீறாமல் இருக்க துணைபுரிகின்றன.

கதைக்களத்தைச் சிறப்பாக பதிவு செய்திருக்கும் ராம்நாத் ஷெட்டியின்ஒளிப்பதிவு நேர்த்தியும், அதற்கேற்ற பிண்ணனி இசையை வழங்கியிருக்கும் சபேஷ்-முரளியின் இசையும் மிருகத்துக்கு வலு சேர்க்கின்றன.

மிருக வடிவிலான மனிதனின் கோரத்தைக் காட்டுவதற்கு, படத்தின் பாதி நீளத்தை எடுத்துக் கொண்டதில் தவறில்லை. ஆனால், அதைக் காட்டிய விதம்தான் காண்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது.

"ஒரு கிராமத்தில் காலைக் கடனுக்காக வயலோரம் ஒதுங்குவது மிக இயல்பான ஒன்று. ஆனால், யதார்த்தம் என்ற பெயரில், அதை அப்படியே படச்சுருளுக்குள் கொண்டுவருதல் நல்லதல்ல" என்று இயக்குனர் மகேந்திரன் பேட்டி ஒன்றில் எப்போதோ குறிப்பிட்ட ஞாபகம்.

அவர் செய்யக்கூடாது என்றுச் சுட்டிக்காட்டியத் தவறையே 'மிருகம்' படத்தின் முதல் பாதியில் புரிந்திருக்கிறார், சாமி.

ஆனால், சமூகத்தால் சாதாரணமாகவே வெறுக்கப்படும் ஒரு நபருக்கு 'எய்ட்ஸ்' பாதித்தால், அவன் மீதி வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பிற்பாதியின் மூலம் சொல்லப்பட்ட விதம், இயக்குனர் சாமியின் வல்லமையை வெளிப்படுத்துக்கிறது!

மொத்தத்தில், ஓரளவு மிரட்டவே செய்கிறது 'மிருகம்'!
(மூலம் - வெப்துனியா)
1| 2
 
மேலும்...
பில்லா
எவனோ ஒருவன்
ராமேஸ்வரம் - விமர்சனம்
ஒன்பது ரூபாய் நோட்டு
பொல்லாதவன்
வேல்
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - வாழ்க்கையை காலத்தின் போக்கில் விட்டுவிடாமல், இலக்குகள் பலவற்றை நிர்ணயித்து அதை அடையும் முயற்சியில் தொடர்ந்து...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
பில்லா
பிரபலமான சர்வதேச கடத்தல்காரன் பில்லா (அஜித்), ஒவ்வொரு முறையும் போலீசாருக்கு தண்ணி காட்டிவிட்டு எஸ்கேப்...
எவனோ ஒருவன்
பொல்லாதவன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தலைப்பை பார்த்தவுடன் 'ஆரோக்கியத்துக்கும் வண்ணங்களுக்கும் என்ன தொடர்பு?' என்ற சந்தேகம் எழுவது தெரிகிறது....
மேலும் படிக்க|மேலும்...
Marketplace