யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா விமர்சனம்
ராமேஸ்வரம் - விமர்சனம்
- சுந்தர்
காதல் கதையோடு இலங்கை அகதிகளின் வாழக்கை நிலையையும், அவர்களின் வலியையும் சொல்ல பதிவு செய்திருக்கிறது 'ராமேஸ்வரம்' .

இலங்கையிலிருந்து அகதியாக ராமேஸ்வரம் வரும் ஜீவன் மீது பரிவு காட்டுகிறார் ஊர் பெரிய மனிதரின் மகள் வசந்தி. அவளைத் தவிர்க்கும் ஜீவன், ஒருகட்டத்தில் மனம் மாறி நேசிக்கிறார் .இருவருக்குமான காதல் இறுகுகிறது.எதிர்பார்த்தது போன்றே அவர்கள் காதலுக்கு வசந்தி வீட்டில் எதிர்ப்பு.

காதலியைக் கைப்பிடிக்க வருவேன் என்று சொல்லிவிட்டு ஜீவன் தன் ஊர் மக்களுடன் தாயகம் செல்கிறார்.திரும்பி வந்து காதலியைக் கைப்பிடித்தாரா என்பதுதான் கதை.

அழகாக படம் பிடிக்கப்பட்ட ராமேஸ்வரமும், கடல் மற்றும் கடல் பகுதியும் ஒளிப்பதிவாளர் குருதேவ் - வெற்றிக்கு சபாஷ் போட வைக்கிறது.

அதிலும் குறிப்பாக 'எல்லோரையும் கூட்டிப்போக கப்பல் வருமா' என்கிற பாடல் வரிகளுக்கு, வானத்தையும் மண்ணையும் ஒரே பிரேமில் காட்டுகிற காட்சிகள் படு அழகு.

டல் மேக்கப்பில் அகதியாக வாழ்ந்து ஜீவன் பாத்திரத்திற்கு 'ஜீவன் ' கொடுத்துள்ளார் ஜீவா.காதலி வசந்தியாக வரும் பாவனாவும் துறுதுறுப்பு காட்டி இருக்கிறார்.

நெஞ்சைத் தொடும் வசனங்கள் ! அதே சமயம் எளிமையாகவும்...! உதாரணத்திற்கு
"உங்க ஊரையும் எங்க ஊரையும் கடல் பிரிச்சிருக்கலாம். ஆனா கீழே பூமி ஒட்டிக்கிட்டுத்தான் இருக்கு" என்ற வசனத்தை சொல்லலாம்.

அதேபோன்று நிருவின் இசை ! பாடல்களோடு பின்னணி இசையிலும் படத்திற்கு தன் பங்கிற்கு ஜீவனூட்டி இருக்கிறார்.

அகதிகளின் வாழ்க்கை பின்னணியில் சொல்லப்பட்டதாலோ என்னவோ, காதல் கதை என்றாலும் படம் முழுக்க ஒரு சோகம் இழையோடுவதாக உணர்வதை தவிர்க்க முடியவில்லை.

இருப்பினும் காதல் கதைக்கு இலங்கை அகதிகளின் வாழக்கை பின் புலத்தை எடுத்துக் கொண்டு அவர்களது வாழக்கை சோகங்களை வெளிப்படுத்த முயற்சித்த இயக்குனர் செல்வத்தை பாராட்டலாம் !

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஒன்பது ரூபாய் நோட்டு
பொல்லாதவன்
வேல்
கண்ணாமூச்சி ஏனடா
பசுபதி மே/பா ராசக்காபாளையம்
கற்றது தமிழ்
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - தமிழ் திரையுலகின் வித்தியாசமான நடிகர்களிகளில் ஒருவர். மனதில் பட்டதை பட்டென்று போட்டு உடைக்கும்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
பொல்லாதவன்
எந்த வேலையும் இல்லாத ஒரு இளைஞர் புது பைக் வாங்குகிறார். வில்லன் கும்பல் அதை கடத்தி செல்ல, அந்த பைக்கை...
வேல்
கண்ணாமூச்சி ஏனடா
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - பொதுவாக வயதானவர்களைதான் மாரடைப்பு தாக்கும் என்று பலரும் நம்பி கொண்டிருக்கின்றனர். ஆனால்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace