யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா விமர்சனம்
வேல்
- பெருமாள்
surya
FE
வழக்கமான ஆள் மாறாட்ட கதை. கொஞ்சம் ஆக்சன், காதல் சேர்த்து கமர்ஷியல் 'ஹிட்'டடித்திருக்கிறார் இயக்குனர் ஹரி.

சரண்ராஜ் - சரண்யா தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கிறது. ரயில் பயணத்தில் ஒரு குழந்தை காணாமல் போய்விட, மற்றொரு குழந்தை பெற்றொருடன் நகரத்தில் வளர்கிறது.

காணாமல் போன குழந்தை, நாசர் - அம்பிகா தம்பதியிடம் கிராமத்தில் வளர்ந்து ஆக்ரோஷ வாலிபனாகிறார். இது தான் வெற்றி வேல் என்ற பெயரில் வரும் கிராமத்து சூர்யா.

நகரத்தில் பெற்றோரிடம் வளருபவர் டிடெக்டிவ் நிறுவனத்தில் பணிபுரியும் வாசு என்கிற மற்றொரு சூர்யா.

ஒரு கட்டத்தில் கிராம்த்து சூர்யாவும், நகரத்து சூர்யாவும் சந்தித்துக்கொள்ள தங்களுக்குள்ள சகோதர உறவு இருவருக்கும் தெரிய வருகிறது. சில காரணங்களுக்காக இருவரும் இடம் மாற, எதிரிகளுடன் வீரப் போராட்டம், குடும்பத்துக்குள் பாசப்போராட்டம் என்று சுபமாக முடிகிறது படம்.

சூர்யா தனது திறமை முழுவதையும் வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்பை மிக கச்சிதமாக பயன் படுத்தியிருக்கிறார். நடை, உடை, பாவனை போன்ற சிம்பிளான விஷயங்களில் வித்தியாசம் காட்டுகிறார்.

ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும் கிராமத்து சூர்யாவாகட்டும், பாசத்தில் உருகும் நகரத்து சூர்யாவாகட்டும் நடிப்பில் ஜொலிக்கிறார் இரட்டைவேட சூர்யா.

துறுதுறு நகரத்து பெண்ணாக வரும் அசினும் நடிப்பில் ஸ்கோர் பண்ணுகிறார். வடிவேலுவும் வழக்கம் போல் காமெடியில் கொடி கட்டுகிறார். காமெடி வில்லனாக வரும் கலாபவன் மணியும் வில்லத்தினத்தில் மிரட்டுகிறார்.

ஒவவொரு கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் உணர்ந்து விறுவிறுப்பாக படமாக்கியிருக்கிறார் ஹரி. படத்தின் வேகத்துக்கு ஈடுகொடுத்து காட்சிகளை பதிவு செய்திருக்கிறது ப்ரியன் காமிரா. யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்களை ரசிக்கலாம்.

தீபாவளி படங்களில் முதலிடத்தை பிடிக்க வேண்டும் என்ற இயக்குனர் ஹரியின் கடின உழைப்பு படத்தில் தெரிகிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கண்ணாமூச்சி ஏனடா
பசுபதி மே/பா ராசக்காபாளையம்
கற்றது தமிழ்
சிவி
உடம்பு எப்படி இருக்கு?
மலைக்கோட்டை
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - சாதுர்யம், அடக்கம், எளிமை, தனித்தன்மை, அமைதி போன்ற நற்குணங்கள் நிறைந்த இவர், அனைவரிடமும் சுலபமாக பழகும் குணம்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
கண்ணாமூச்சி ஏனடா
காதல், சென்டிமெண்ட், காமெடி கலந்த குடும்பப் படம். மலேசியாவில் சாப்ட்வேர் இன்ஜினியரான ப்ருத்வி ராஜூ....
கற்றது தமிழ்
பசுபதி மே/பா ராசக்காபாளையம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தங்களது குழந்தை மிகவும் குண்டாக இருக்கின்றதே என்ற கவலை பெற்றோர்கள் பலருக்கும் இருக்கலாம்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace