யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா விமர்சனம்
கண்ணாமூச்சி ஏனடா
- மு.பெருமாள்
kannamoochuenada
FE
காதல், சென்டிமெண்ட், காமெடி கலந்த குடும்பப் படம். மலேசியாவில் சாப்ட்வேர் இன்ஜினியரான ப்ருத்வி ராஜூக்கும், அங்கு வரும் மாணவி சந்தியாவுக்கும் காதல்.

இருவரும் பெறறோர் சம்மதத்துக்காக சென்னை வருகின்றனர். காதலுக்கு சந்தியாவின் தாயான ராதிகா பச்சைக்கொடி காட்ட, சந்தியாவின் தந்தையும், போலீஸ் கமிஷனருமான சத்யராஜ் இதை பிரிக்க நினைக்கிறார்.

பல்வேறு சதித்திட்டங்களை தீட்டி, பிருத்விராஜ் மீது குற்றம் சுமத்தி விரட்டியடிக்கிறார். இதனால், சத்யராஜிடமிருந்து மனைவி ராதிகாவும், மகள் சந்தியாவும் பிரிகின்றனர்.

தனது காதலியையும் கைப்பிடித்து, அவரது பெற்றோரையும் சேர்த்துவைக்க ப்ருத்விராஜ் போராடுவது கதை.

வழக்கமான லொல்லு சத்யராஜ் இந்த படத்தில் மிஸ்ஸிங். பொறுப்பான போலீஸ் அதிகாரியாகவும், பாசமான தந்தையாகவும் அலட்டிகொள்ளாமல் நடித்திருக்கிறார். மகளின் காதலுக்கு குறுக்கே நிற்கும்போது ஒரு தந்தைக்கேயுரிய குணாதிசயம் அவரது நடிப்பில் கொப்பளிக்கிறது.

அப்பாவித்தனமாக முகத்தை வைத்துகொண்டு நடிப்பது பிருத்விராஜ்க்கு கைவந்த கலையாகிவிட்டது. சந்தியாவை காதலிக்க முயற்சிக்கும்போதும், வருங்கால மாமனாரிடம் சம்மதம் வாங்க முயற்சிக்கும்போதும் அவர் கலகலக்க வைக்கிறார்.

காதலனுக்கும், தந்தைக்கும் இடையில் சிக்கி தவிக்கும் பெண்ணாக உருக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சந்தியா. நீண்ட நாளைக்கு பின்னர் மீண்டும் பெரியதிரைக்கு வந்திருக்கும் ராதிகா, மகளின் காதலுக்காக உருகுகிறார்.

ராதாரவி, ஸ்ரீப்ரியா, மனோபாலா ஆகியோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இசை-ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் சுமார். ப்ரிதாவின் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளுமை. இயக்குனர் ப்ரியா.வி ஒரு அழகான் காதல் கதையில் சுவராசியமான முடிச்சுகளை போட்டு, கலகலப்பாக கதையை நகர்த்தியிருக்கிறார்.

இடைவேளைக்கு பின்னர் இன்னும் விறுவிறுப்பாக காட்சிகளை அமைத்திருக்கலாம்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பசுபதி மே/பா ராசக்காபாளையம்
கற்றது தமிழ்
சிவி
உடம்பு எப்படி இருக்கு?
மலைக்கோட்டை
சத்தம் போடாதே
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 'மன்மதன்', 'வல்லவன்', 'கெட்டவன்' என தலைப்புகள் பலவற்றுக்கும் சொந்தக்காரரான இவரிடம், உயரியதாகப் போற்றப்படும்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
கற்றது தமிழ்
இது சாஃப்ட்வேர் யுகம். இதில் தமிழ் எம்.ஏ. படித்த ஒருவன் சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக சந்திக்கும்...
சத்தம் போடாதே
மருதமலை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'ஹார்ட் பர்ன்' என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் 'நெஞ்செரிச்சல்', ஃபாஸ்ட் ஃபுட் வாழ்க்கையில் மிக எளிதாக பலரையும்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace