|
| பசுபதி மே/பா ராசக்காபாளையம் | |
தாய் - மகன் சென்டிமெண்டுடன் சரி விகிதத்தில் காமெடி கலந்து ஒரு பொழுதுபோக்கு படம்.
ராசக்கா பாளையத்தை சேர்ந்த ரஞ்சித் ஓர் அப்பாவி. தன் அம்மா மீது உயிரையே வைத்திருக்கும் இவர், சம்பாதித்து அம்மாவை நல்ல முறையில் வைக்க வேண்டும் என்பதற்காக பிழைப்பு தேடி சென்னை வருகிறார்.
வந்த இடத்தில் சந்தேக கேசில் போலீசில் சிக்க, பிறகு போலீஸ் ஸ்டேஷனிலேயே தங்கி எடுபிடி வேலைகளை கவனிக்கிறார்.
காவல்துறையே கண்டு தொடைநடுங்கும் ஒரு ரவுடியை ரஞ்சித் அடித்து துவைத்து எடுக்க, இன்ஸ்பெக்டர் விவேக்குக்கு பாராட்டு மழை. இதனால் விவேக்குக்கு உதவுவதற்காக அடிக்கடி போலீஸ் வேஷமும் போடுகிறார்.
ஒரு கட்டத்தில் தாயின் சிகிச்சைக்காக ரூ.5 லட்சம் வேண்டி தீவிரவாத கும்பலுடன் சேர்ந்து கடத்தலில் ஈடுபடும்போது போலீசில் சிக்கி ஜெயிலுக்குப் போகிறார். முடிவு என்ன என்பது எதிர்பாராத க்ளைமாக்ஸ்.
ரஞ்சித் போன்ற ஒரு முரட்டு உடல்வாகு கொண்ட ஒருவரை அப்பாவி ஹீரோவாக்கி, அவரையே காமெடி செய்ய வைத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர். அதுவும் விவேக்குடம் சேர்ந்ததும் இருவரும் அடிக்கும் லூட்டி செம காமெடி.
முதல் பாதி காமெடி சரவெடியாக செல்லும் படம் இடைவேளைக்கு பிறகு தாய்-மகன் சென்டிமெண்டுக்கு மாறுகிறது.
நேகா நாயர், சிந்து துலானி என இரண்டு கவர்ச்சி பாம்கள் இருந்தும் காதல், கவர்ச்சி என்ற போர்வையில் ஆபாசமான காட்சிகளை புகுத்தாதது ஆறுதல்.
ரஞ்சித்தின் அம்மாவாக வரும் ராணி ஒட்டு மொத்த பரிதாபத்தையும் அள்ளிகொள்ளும் அப்பாவி கிராமத்து தாய். நிறைவாக செய்திருக்கிறார்.
தேவாவின் இசையில் அம்மா பாசத்தை வெளிப்படுத்தும் 'உயிர் தந்த தாயே...' பாடல் மனதை உருக வைத்தால், சிறையில் கஞ்சாகருப்பு பாடும் 'ஒண்ணு ரெண்டு மூணு படிச்சேன் சேலம் ஜெயிலிலே...' என்ற சமூகத்தை சாடும் பாடல் தாளம் போட வைக்கிறது.
கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்களை எழுதி செல்வபாரதி இயக்கியிருக்கிறார். அத்தனை பொறுப்புகளையும் சிறப்பாகவே அமைத்திருக்கும் அவரது திறமைக்கு ஒரு சபாஷ்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 'மன்மதன்', 'வல்லவன்', 'கெட்டவன்' என தலைப்புகள் பலவற்றுக்கும் சொந்தக்காரரான இவரிடம், உயரியதாகப் போற்றப்படும்... |
| |
|
|
|
|
 | | FE |
| | | கற்றது தமிழ் | | இது சாஃப்ட்வேர் யுகம். இதில் தமிழ் எம்.ஏ. படித்த ஒருவன் சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக சந்திக்கும்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'ஹார்ட் பர்ன்' என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் 'நெஞ்செரிச்சல்', ஃபாஸ்ட் ஃபுட் வாழ்க்கையில் மிக எளிதாக பலரையும்... |
| |
|
|
|
|
|
|
|