|
| கற்றது தமிழ் | |
இது சாஃப்ட்வேர் யுகம். இதில் தமிழ் எம்.ஏ. படித்த ஒருவன் சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக சந்திக்கும் பிரச்சனைகளும், இதனால் சட்டத்தை கையில் எடுக்கும் அவனுக்கு இறுதியில் ஏற்படும் சோக முடிவும் தான் கதை. தமிழ் ஆசிரியர் மீது கொண்ட பற்றினால் தமிழ் மீது ஆர்வமாகி எம்.ஏ. பட்டதாரியாகிறான் பிரபாகர். ஆனால் கம்ப்யூட்டர் படித்தவர்கள் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறபோது, தான் மட்டும் ஆயிரத்துக்கும், இரண்டாயிரத்துக்கும் போராட வேண்டிய அவலம்.
சொற்ப சம்பளத்தில் கிடைக்கும் ஆசிரியர் வேலையும் போலீஸ்காரர் ஒருவரால் பறிபோகிறது. இதற்கிடையே, சிறுவயதில் நேசித்த ஆனந்தியையும் விலைமாதுவாக சந்திக்க நேரிடுகிறது.
இதனால் சமூகத்தின் மீதும், கம்ப்யூட்டர் யுகம் மீதும் பிரபாகரின் கோபம் திரும்புகிறது. விளைவு, ஒரு கட்டத்தில் சைக்கோ நிலைக்கு போகும் பிரபாகர் பலரையும் போட்டுத்தள்ளுகிறான்.
இறுதியில் தான் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு விட்டு, காதலியையும் மீட்டு வாழ்க்கையை துவங்க தயாராகும்போது எதிர்பாராத விதமாக சோகத்துடன் முடிகிறது படம்.
இயக்குநர் ராமுக்கு இது முதல் படமாம். முதலில் வித்தியாசமாக கதை சொல்ல முயன்றதற்காகவே அவரை பாராட்டலாம். அதற்காக சமூகத்தின் மீது கோபம் என்ற பெயரில் அப்பாவி மக்களை கதாநாயகன் போட்டு தள்ளுவது போல் கதை அமைத்திருப்பது எல்லாம் ரொம்ப ஓவர்.
கதாநாயகன் ஜீவா மிகவும் கனமான ஒரு பாத்தரத்தை ஏற்று மிக கச்சிதமாக நடித்திருகிறார். ஆனால், கதை பெரும்பாலான இடங்களில் யதார்த்தத்தை மீறி போவதால் ஒருவித சலிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
அறிமுக நாயகி அஞ்சலியும் நடிப்பில் குறைவைக்கவில்லை. தமிழய்யாவாக வரும் அழகம்பெருமாள் தன் பங்குக்கு நடிப்பில் ஸ்கோர் பண்ணுகிறார்.
கதிரின் காமிரா புகுந்து விளையாடியிருக்கிறது. காட்சிகளில் ஏற்படும் சலிப்பை ஓரளவு ஈடுகட்டுவது காமிராதான். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் சுகம்.
படத்தின் தலைப்பில் ஏற்பட்ட குழப்பம் போலவே, பல கிளைக்கதைகளில் எந்த கதையை மையப்படுத்துவது என்பதில் இயக்குனருக்கு எக்கச்சக்க குழப்பம் ஏற்பட்டிருப்பது காட்சிகளில் தெரிகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - பிறந்த தேதி : ஜூலை 7, 1981
மின்னல் வேக வளர்ச்சி என்பார்களே, அதற்கு மிகவும் பொருத்தமானவர் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் மகேந்திரசிங் தோனி.... |
| |
|
|
|
|
 | | FE |
| | | சத்தம் போடாதே | | 'சைக்கோபாத்' வகையறா திரைக்கதையில், குடிப்பழக்கத்தால் உண்டாகும் தீமையை அழுத்தமாகச் சொல்லியிருக்கும் சமூக... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - இயற்கையின் நியதி முதுமை. அதை தவிர்க்க முடியாது. ஆனால் தள்ளிப்போடலாமே! அதற்கு இதோ ஒரு சூப்பர் வழி... |
| |
|
|
|
|
|
|
|