யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா விமர்சனம்
உடம்பு எப்படி இருக்கு?
- சுந்தர்
Dr Raja Sekar
FE
ராணுவ மேஜர் ஒருவர், அரசியல்வாதியானால் எப்படி இருக்கும் என்பதை மிரட்டலான திருப்பங்களுடன் காட்ட முயன்றிருப்பதே, 'உடம்பு எப்படி இருக்கு?'.

தனது சொந்த ஊருக்கு விடுமுறையில் திரும்பும் ராணுவ மேஜரான டாக்டர் ராஜசேகர், தன்னுடைய தந்தையும், மாநில அமைச்சருமான ரகுவரனின் அதிகார துஷ்பிரயோகங்களைக் கண்டு வெகுண்டெழுகிறார்.

அரசியலில் களமிறங்க முடிவெடுத்து, ரகுவரனைத் தோற்கடித்துவிட்டு சுயேச்சை சட்டமன்ற உறுப்பினராகிறார். இதனால், தாதாக்கள் பலரது உதவியுடன் சுயநலத்துடன் செயல்பட்டு வந்த தந்தையின் கொட்டம் அடக்கப்படுகிறது.

அதேநேரத்தில், பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஆளும்கட்சிக்கு, நிபந்தனையுடன் ஆதரவளித்து உள்துறை அமைச்சராகிறார் ராஜசேகர். அதன்மூலம் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுகிறார். அதன்பின் அரசியலில் ஏற்படும் நெருக்கடிகளை எவ்வாறு சமாளித்து சிறப்பாக செயல்படுகிறார் என்பதே மீதிக்கதை.

மலையாளத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய 'லயன்' படத்தின் ரீமேக்தான் இப்படம். இதே கதையுடன் சரத்குமாரின் 'நம்நாடு' படமும் வந்திருப்பதால், இவ்விரண்டையும் ஒப்பிட வேண்டியது கட்டாயமாகிறது.

வீட்டில் கணவரை இயக்கும் ஜீவிதா ராஜசேகர்தான் இப்படத்துக்கும் இயக்குனர். நடிகருக்கு ஏற்ற இயக்குனர் என்பதை நிரூபித்துள்ளார்.

'இதுதாண்டா போலீஸ்' ராஜசேகரின் மிடுக்கு இன்னும் மாறவில்லை என்பதற்கு, தேசியக் கொடியை தலைகீழாகக் கட்டிக் கொண்டு பறக்கும் அமைச்சரின் காரை மறித்து, அவருக்குப் பாடம் புகட்டும் காட்சியிலேயே தெரிந்துவிடுகிறது. அவரது உடல்மொழிகளும், வாய் மொழிகளும் படத்துக்கு வேகத்தைக் கூட்டும் அம்சங்கள்.

வழக்கு ஒன்றில் சாட்சியாக வந்து, ராஜசேகரைக் கரம்பிடிக்கும் ஷம்விருதாவின் கதாப்பாத்திரம், கதையின் தேவையைப் பூர்த்தி செய்கிறது.

ஜகஜ்ஜால தாதாவாக வரும் கலாபவன் மணி, கலகல வில்லனாக அசத்தியுள்ளார். அமைதிப்புயலாக தனது பங்குக்கு மிரட்டியிருக்கிறார் ரகு. காவல்துறை அதிகாரியான பானுச்சந்தரும் மனதில் பதிகிறார். முமைத்கானும் கலக்கலாக வலம் வந்திருக்கிறார்.

மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள இப்படத்துக்கு, நேரடி தமிழ் படம் போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளார் வசனகர்த்தா செல்வா. ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் பலம் சேர்க்கும் மற்ற அம்சங்கள். டப்பிங் படத்தில் ரீரெக்கார்டிங் இசையை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் இசையிலும் மிரட்டல் உண்டு.

சரி... படம் எப்படி இருக்கு? 'நம்நாடு' படத்தையும் 'உடம்பு எப்படி இருக்கு?' படத்தையும் எதுதான் வேறுபடுத்திக் காட்டுகிறது?

முன்னதில் 'தமிழ்' வாசனை; பின்னதில் 'தெலுங்கு'க்கே உரிய காரம்!

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மலைக்கோட்டை
சத்தம் போடாதே
மருதமலை
உற்சாகம்
தி ஹோஸ்ட் (ஆங்கிலம்)
ஆரியா
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - பிறந்த தேதி : ஜூலை 7, 1981 மின்னல் வேக வளர்ச்சி என்பார்களே, அதற்கு மிகவும் பொருத்தமானவர் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் மகேந்திரசிங் தோனி....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
சத்தம் போடாதே
'சைக்கோபாத்' வகையறா திரைக்கதையில், குடிப்பழக்கத்தால் உண்டாகும் தீமையை அழுத்தமாகச் சொல்லியிருக்கும் சமூக...
மருதமலை
உற்சாகம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - இயற்கையின் நியதி முதுமை. அதை தவிர்க்க முடியாது. ஆனால் தள்ளிப்போடலாமே! அதற்கு இதோ ஒரு சூப்பர் வழி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace