|
| மலைக்கோட்டை | |
விஷாலுக்கு மற்றுமொரு அருமையான ஆக்சன் படம். கூடவே காமெடியும் கலந்துகட்டி அடித்திருக்கிறார்.
ஜாமீன் கையெழுத்து போடுவதற்காக மலைக்கோட்டை காவல் நிலையம் வருகிறார் விஷால். வந்த இடத்தில் ப்ரியாமணியுடன் காதலாகிறார்.
விஷாலை கலாய்ப்பதற்காக வில்லன் தேவராஜின் தம்பியை காதலிப்பதாக ப்ரியாமணி அளந்து விட, இதையே சாக்காக வைத்து அவரிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறது வில்லன் குரூப்.
உண்மை தெரிந்து வில்லன் கும்பலை விஷால் பின்னி, பெடலெடுக்க வில்லன் குரூப் அவரது உயிருக்கு குறிவைக்கிறது. அவர்களது கொலைவெறியிலிருந்து தன்னையும், தனது காதலையும் விஷால் எப்படி காப்பாற்றி கொள்கிறார் என்பதை கலகலக்க வைக்கும் காமெடி தூவி, பொறி பறக்கும் ஆக்சன் மசாலா கலந்து சொல்லியிருக்கிறார்கள்.
இந்த படத்திலும் ஆக்சனில் தனி முத்திரை பதிக்கிறார் விஷால். தன்னை தாக்க வரும் வில்லன் குரூப்பை உதைத்து பந்தாடுகிறார். இந்த மெய்சிலிர்க்க வைக்கும் ஆக்சன் காட்சிகளுக்கு உயிரோட்டமாக அமைகிறது விஷாலின் சிக் உடம்பும், அதிகபட்ச உயரமும்.
காதல் காட்சிகளில் இளமை துடுக்குடன் கலாய்க்கும் விஷால், காமெடி காட்சிகளில் கலகலக்க வைக்கிறார்.
'முத்தழகு'வாக பார்த்த ப்ரியாமணியா இது?. நம்பவே முடியவில்லை. அந்தளவுக்கு கொள்ளை அழகுடன் வலம் வரும் மாடர்ன் கேர்ள்.
இவர் விளையாட்டுத்தனமாக சொல்லும் ஒரு பொய்யே கதையின் முக்கிய திருப்பமாகி படத்தை மின்னல் வேகத்தில் கொண்டு செல்கிறது.
பொன்னம்பலம், தண்டபாணி, ஆசிஷ் வித்தியார்த்தி ஆகியோர் வரும் காட்சிகளிலும் காமெடி இழையோடுகிறது. கன்னட வில்லன் தேவராஜ் நிஜமாகவே மிரட்டுகிறார்.
மணி சர்மாவின் இசையில் பாடல்கள் கேட்க கேட்க சுகம். நடன அமைப்பும், பாடல் காட்சிகளை படம் பிடித்த விதமும் கொள்ளை அழகு.
விஷால், பரியாமணி ஜோடியை பயன்படுத்தி, ஆக்சன், காதல், காமெடி கலந்து ஒரு அருமையான கமர்ஷில் ஹிட் தந்திருக்கிறார் இயக்குனர் பூபதி பாண்டியன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - பிறந்த தேதி : ஜூலை 7, 1981
மின்னல் வேக வளர்ச்சி என்பார்களே, அதற்கு மிகவும் பொருத்தமானவர் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் மகேந்திரசிங் தோனி.... |
| |
|
|
|
|
 | | FE |
| | | சத்தம் போடாதே | | 'சைக்கோபாத்' வகையறா திரைக்கதையில், குடிப்பழக்கத்தால் உண்டாகும் தீமையை அழுத்தமாகச் சொல்லியிருக்கும் சமூக... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - இயற்கையின் நியதி முதுமை. அதை தவிர்க்க முடியாது. ஆனால் தள்ளிப்போடலாமே! அதற்கு இதோ ஒரு சூப்பர் வழி... |
| |
|
|
|
|
|
|
|