|
| மருதமலை | |
வழக்கமான பழிவாங்கும் கதைதான். கதை களத்தை மட்டும் சற்று மாற்றியமைக்க முயற்சித்திருக்கின்றனர்.
தேர்தல் வன்முறைகளை தட்டிக்கேட்கும் நாசரை வில்லன் கும்பல்கள் தீர்த்துக்கட்ட, அந்த ஊர் போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் அர்ஜூன் பொங்கி எழுந்து வில்லன்களை வதம் செய்வதுதான் 'மருதமலை' கதை.
'16 ஆண்டுகளாக ஒரு தொகுதியில் தேர்தலே நடத்தவிடாமல் தடுக்கிறது வில்லன் கும்பல். அதையும் மீறி தேர்தல் அதிகாரி ரகுவரன் தேர்தலை நடத்த முயற்சிக்க, வெடிக்கிறது பிரச்சனை' என்று கதை நடைபெறும் சூழலை மட்டும் வித்தியாசமாக்கி விறுவிறுப்பை ஏற்றியிருக்கிறார்கள்.
முந்தைய படம் போலவே, காமெடி ப்ளஸ் ஆக்சன் கலந்து திரைக்கதையை நேர்த்தியாக அமைத்திருகிறார் இயக்குனர் சுராஜ்.
வடிவேலுவும் இயக்குனர் தன்மீது வைத்த நம்பிக்கையை பொய்யாக்காமல், படம் முழுவதும் நகைச்சுவையை வழிந்தோட விட்டிருக்கிறார்.
கடைக்காரர்களை மிரட்டி, பிச்சைக்காரனுடன் போட்டி போட்டு மாமூல் வாங்குவது, ரயில்வே தண்டவாளத்தில் பிணத்துக்கு காவல் இருக்கும்போது, பேயை கண்டு அலறுவது என்று காமெடியில் கலக்குகிறார்.
முற்பாதியில் அவருடன் ஜோடி சேர்ந்து அர்ஜூனும் ரொம்பவே கலகலப்பூட்டுகிறார். பிற்பாதியில் சீரியசாகி விடுகிறார்.
வழக்கம் போல், நாயகர்களுடன் டூயட் பாட மட்டும் பயன்பட்டிருக்கிறார் நிலா.
நேர்மையான தேர்தல் அதிகாரி ரகுவரன், அநியாயத்தை தட்டி கேட்டு உயிரை விடும் நாசர் ஆகியோர் மனதில் நிற்கும் பாத்திரங்கள்.
போஸ் வெங்கட், தண்டபாணி, சண்முகராஜன் என்று வில்லன்களும் தங்கள் பங்குக்கு குறை வைக்காமல் மிரட்டியிருக்கின்றனர். டி.இமானின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்.
திடீரென அர்ஜூனுக்கு முறைப்பெண் வருவது போன்ற தேவையில்லாத கிளைக்கதை காட்சிகளை தவிர்த்திருந்தால், 'மருதமலை' சிகரத்தை தொட்டிருக்கும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய... |
| |
|
|
|
|
 | | FE |
| | | உற்சாகம் | | நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத... |
| |
|
|
|
|
|
|
|