|
| உற்சாகம் | |
நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறுகளைப் புகுத்தி, அதன்மூலம் வித்தியாசம் காட்ட முயன்றிருக்கிறார், இயக்குனர் ரவிச்சந்திரன்.
வேலையில்லா பட்டதாரியான நந்தாவுக்கும், ரிசர்வ்டான குணம் கொண்ட ஷெரீனுக்கும் இடையே நட்பு மொட்டுவிடுகிறது. நந்தாவுக்கோ, அது காதலாக மலர்கிறது.
அந்நேரத்தில், ஃபாரின் மாப்பிள்ளை தினேஷுக்கும், நந்தாவின் சினேகிதி ஷெரீனுக்கும் நிச்சயதார்த்தம் நடக்கிறது. திருமணத்துக்கு முன்னதாக, ஷெரீனுடன் 'பழக' விரும்புகிறார் தினேஷ்.
அப்போது, ஷெரீன் - நந்தா நட்பு விவகாரம் தெரிய வர, ஷெரீனின் கன்னித்தன்மையை பரிசோதனை செய்கிறார் தினேஷ். இதையறிந்த நாயகிக்கு, மாப்பிள்ளை மீது வெறுப்பு உண்டாகிறது. அவரிடம் இருந்து விலக முயலும்போது, விபரீதங்கள் நேர்கிறது. வழக்கம்போல் நாயகிக்கு, நண்பர் வடிவில் துணை நிற்கிறார் நாயகன்.
ஷெரீனை அடைவதற்காக, மாப்பிள்ளை தினேஷ் விஸ்வரூபம் எடுக்கிறார். அதன் விளைவுகள் என்னென்ன என்பதே மீதிக்கதையும் க்ளைமாக்ஸும்.
ஓல்ட் ஒயினை, நியூ பாட்டிலில் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர். ஆனால் ஒயின், ரசிகர்களுக்கு சுவை சேர்க்கும் வகையிலாக அமையவில்லை.
வேலையில்லாதவராகவும், ரவுடியாகவும் சொல்லப்படும் நாயகன் நந்தாவின் பாத்திரப் படைப்பில் பல்வேறு நெருடல்கள். நந்தாவிடம் மட்டுமின்றி, ஷெரீனின் நடிப்புத் திறனும் பயன்படுத்தப்படவில்லை. இதில் தப்பியவர், அறிமுக வில்லன் தினேஷ் மட்டுமே, அலட்சியமாக மதிப்பெண்களை அள்ளிச் செல்கிறார். விவேக்கின் நகைச்சுவையும் எடுபடவில்லை.
குருதேவாவின் ஒளிப்பதிவும், ரஞ்சித் பாரோட்டின் இசையும் படத்துக்கு ஓரளவு பலம் சேர்க்கும் அம்சங்கள்.
கதையைத் தேர்ந்தெடுப்பதிலும், திரைக்கதையை அமைப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், ரசிகர்களுக்கு 'உற்சாகம்' கிடைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வாஸ்து - புதிதாக வீடு கட்டுபவர்கள் மனையடி சாஸ்திரத்தின்படி, வீடுகளை அமைத்தால் நன்மை உண்டாகும் என்பது பலரது நம்பிக்கை.... |
| |
|
|
|
|
 | | FE |
| | | பள்ளிக்கூடம் | | இழுத்து பூட்டும் அபாயத்திலுள்ள கிராம பள்ளிக்கூடத்தை முன்னாள் மாணவர்கள்.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - முகத்தில் கரும்புள்ளியா..? கவலை வேண்டாம், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க இதோ ஒரு சூப்பர் டிப்ஸ்... |
| |
|
|
|
|
|
|
|