|
| தி ஹோஸ்ட் (ஆங்கிலம்) | |
'ஜாஸ்', 'ஜூராஸிக் பார்க்', 'காட்ஸிலா' வகையறா படங்களின் ரசிகர்களுக்கு அற்புத விருந்தாக வந்திருக்கிறது 'தி ஹோஸ்ட்'!
கற்பனையால் உருவான கொடிய ராட்சஷ மிருகத்தைக் கொண்ட கதையாக இருந்தாலும், காட்சி அமைப்புகள் மற்றும் திரைக்கதையால் தன்னால் இயன்றவரை வித்தியாசத்தைக் காட்ட முயற்சித்திருக்கிறார் இயக்குனர் பாங் ஜூன் ஹோ. அதில், அவர் வெற்றியும் பெற்றுள்ளார்.
கொரியாவில் உள்ள ஆறு ஒன்றில், பல்லாண்டுகாலமாக பயன்படுத்தப்படாத ரசாயன அமிலங்கள் கொட்டப்படுகிறது. அமெரிக்க விஞ்ஞானி ஒருவரின் கட்டளையின்படி, கொரிய உதவியாளரால் கொட்டப்பட்ட அமிலங்களால் உருவாகிறது அந்த ராட்சஷ மிருகம்.
அந்த மிருகத்தின் அட்டகாசத்தால், அந்தப் பகுதியே நடு நடுங்கிப் போகிறது. அம்மிருகம், ஆற்றின் கரையோரம் ஓட்டல் நடத்துபவர் ஒருவரின் 13 வயது மகளை கவ்விச் சென்று விடுகிறது.
அக்குழந்தையைக் காப்பாற்றுவதற்காக குடும்பத்தினரால் மேற்கொள்ளப்படும் போராட்டமும், அதனால் ஏற்படும் விளைவுகளுமே படத்தின் மையக்கரு.
எளிதாக யூகிக்கவைக்கும் கிளைமாக்ஸ்தான் என்றாலும், காட்சியமைப்புகள் நம்மை பிரம்மிக்க வைக்கின்றன. பயங்கர மிருகங்களை மையமாக வைத்து உருவாக்கப்படும் படங்களில் பலவற்றில், முழுக்க முழுக்க விறுவிறுப்பு குறையக் கூடாது என்பதற்காக த்ரில்லர் நிறைந்த காட்சிகள் ஆரம்பம் முதல் இறுதி வரை இருக்கும்.
ஆனால், இப்படத்தில் விறுவிறுப்பும், சென்டிமென்ட்டும் சரிவிகிதத்தில் கலக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் புருவத்தை உயர்த்தும் ரசிகர்கள், அந்த அளவிலேயே ஒவ்வொரு கதாப்பாத்திரத்திரங்களிடமும் தங்களது மனதை பறிகொடுப்பர்.
குழந்தையை லாவகமாக கவ்விச் செல்லும் காட்சியின்போது, திரையைக் கிழித்துக்கொண்டு அந்த மிருகத்தின் வால் வெளியே வந்துவிட்டதோ என தோன்ற வைக்கும் காட்சியமைப்பு, தொழில்நுட்பம் சிறப்பாக பயன்படுத்தப்பட்டதற்குச் சான்று.
சாங் காங் ஹோ, பையான் ஹூ, பார்க் ஹோ ஆகியோர் யதார்த்தமான நடிப்பினால் வியப்புக்குள்ளாக்கியிருக்கும் இப்படத்தின் இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகியவை மேலும் வலு சேர்த்துள்ளன.
ஃபான்டசி படங்களை விரும்பும் ரசிகர்கள் மட்டுமின்றி, சென்டிமென்ட் டிராமா வகையறா படங்களை ரசிப்பவர்களுக்கும், படத்தின் தலைப்புக் கேற்றபடி விருந்து படைத்திருக்கிறது தென் கொரியாவில் தயாரிக்கப்பட்ட 'தி ஹோஸ்ட்'!
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வாஸ்து - புதிதாக வீடு கட்டுபவர்கள் மனையடி சாஸ்திரத்தின்படி, வீடுகளை அமைத்தால் நன்மை உண்டாகும் என்பது பலரது நம்பிக்கை.... |
| |
|
|
|
|
 | | FE |
| | | பள்ளிக்கூடம் | | இழுத்து பூட்டும் அபாயத்திலுள்ள கிராம பள்ளிக்கூடத்தை முன்னாள் மாணவர்கள்.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - முகத்தில் கரும்புள்ளியா..? கவலை வேண்டாம், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க இதோ ஒரு சூப்பர் டிப்ஸ்... |
| |
|
|
|
|
|
|
|