|
| ஆரியா | |
தாதாவின் அழகான, அடக்கமான தங்கையை காதலித்து கரம்பிடிக்க கதாநாயகன் நடத்தும் போராட்டங்களை தமிழ் சினிமாவில் பார்த்து பழகிப் போன நமக்கு, இதற்கு முற்றிலும் மாறுபட்ட கோணத்திலான கதையை ஜனரஞ்சக மனோபாவத்துடன் சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர் பாலசேகரன்.
சென்னை நகரின் மிரட்டலான தாதா, காசி (பிரகாஷ் ராஜ்). அவரது குணாதிசயங்களைக் கொண்ட பாசமிகு தங்கை தீபிகா (பாவனா), தனது கல்லூரியில் படிக்கும் பவ்யமான ஆரியாவை (மாதவன்) காதலிக்கிறார். இதற்கு ஒப்புக்கொள்ளாத ஆரியாவை மிரட்டி தனது காதல் வலையில் சிக்க வைக்க முயற்சி மேற்கொள்கிறார். இதற்கு தன்னுடைய தாதா அண்ணனின் உதவியையும் நாடுகிறாள். இதனால், வாழ்க்கை தடம் புரண்ட ஆரியாவின் நிலை என்னானது என்பதே திரைக்கதை.
'லவ்டுடே' மூலம் காதலை மென்மையாக சொன்ன பாலசேகரனா இது என்ற கேள்வி, ஒவ்வொரு காட்சியிலும் எழுகிறது. காதலில் வெற்றி பெறுவதற்கு வன்முறையை நாடும் நாயகியை, ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் விதமான காட்சியமைப்புகள் இல்லாதது பெரிய மைனஸ். ('திமிரு' ஸ்ரேயா ரெட்டி கதாப்பாத்திரத்தின் வலு, இங்கே இல்லை).
கதையில் முரண்பாட்டினை தைரியமாக தேர்ந்தெடுத்த இயக்குனர், அதனை லாஜிக் மீறாமல் இயல்பாக தர முயன்றிருக்கலாம் என்றே தோன்றுகிறது. ஆயினும், "உலகத்திலேயே காதலை இவ்வளவு கேவலமா வெளிப்படுத்திய ஒரே பெண், நீதான்" என்று நாயகியிடம், மாதவன் சொல்லும் டயலாக் மூலம் கதையை நியாயப்படுத்த முயற்சிப்பது பாராட்டுக்குரியது.
கதாப்பாத்திரத்துக்குப் பொறுத்தமாக வலம் வருகின்றனர் மாதவனும், பிரகாஷ் ராஜும். பாவனாவின் பாவனைகளை ரசிக்க முடியாமல் போனதற்கு, அவர் காரணமில்லை என்பது தெளிவு. வடிவேலு தனது பாணியை மாற்றிக் கொள்ளாவிட்டால், திகட்டுதலுக்கு ஆளான ரசிகர்கள், அவரைத் திட்ட நேரிடும் நிலை உண்டாகும்.
கே.வி.குகனின் ஒளிப்பதிவு சற்று ஆறுதல் அளிக்கிறது.ஆனால் மணி ஷர்மாவின் இசையோ, அடிக்கடி கேண்டின் போக உந்துதலாய் இருக்கிறது.
தெலுங்கு வாடையை போதுமானவரை தவிர்த்து, கதையிலும் திரைக்கதையிலும் உரிய கவனம் செலுத்தியிருந்தால், 'ஆரியா' சோபித்திருப்பார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வாஸ்து - புதிதாக வீடு கட்டுபவர்கள் மனையடி சாஸ்திரத்தின்படி, வீடுகளை அமைத்தால் நன்மை உண்டாகும் என்பது பலரது நம்பிக்கை.... |
| |
|
|
|
|
 | | FE |
| | | பள்ளிக்கூடம் | | இழுத்து பூட்டும் அபாயத்திலுள்ள கிராம பள்ளிக்கூடத்தை முன்னாள் மாணவர்கள்.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - முகத்தில் கரும்புள்ளியா..? கவலை வேண்டாம், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க இதோ ஒரு சூப்பர் டிப்ஸ்... |
| |
|
|
|
|
|
|
|