|
| பள்ளிக்கூடம் | |
இழுத்து பூட்டும் அபாயத்திலுள்ள கிராம பள்ளிக்கூடத்தை முன்னாள் மாணவர்கள் சேர்ந்து காப்பாற்றுவது தான் பள்ளிக்கூடத்தின் கதை.
பல்லவமங்கலம் என்ற கிராமத்தில் எப்போது இடிந்து விழுமோ என்ற அபாயத்தில் இருக்கிறது ஒரு பள்ளிக்கூடம். இதில் படித்த முன்னாள் மாணவர்கள் தங்கர்பச்சான், நரேன், சீமான் மற்றும் சினேகா.
இதில் நரேன் மாவட்டக் கலெக்டராகவும், சீமான் திரைப்பட இயக்குனராகவும், தங்கர்பச்சான் விவசாயியாகவும், சினேகா அதே பள்ளியில் ஆசிரியையாகவும் உள்ளனர்.
கால ஓட்டத்தில் இந்த நான்கு பேரும் திசைக்கொன்றாக சிதறி போனாலும், தாங்கள் படித்த பள்ளியை காப்பாற்றுவதற்காக ஒன்று சேருகின்றனர். அதோடு, சாதி பிரச்சனையால் கைகூடாமல் போன் நரேன்-சினேகா காதலும் வெற்றி பெறுகிறது.
இயக்குனராக ஜெயித்த சீமான் இந்த படத்தில் இயக்குனராகவே நடித்து, நடிப்பிலும் முத்திரை பதித்திருக்கிறார். சிறிது இடைவெளிக்கு பின், நரேனுக்கு நல்ல பெயர் பெற்று தந்திருக்கும் படம் இது.
மாணவப்பருவத்தில் கிராமத்து தேவதை, காதல் தோல்வியை மனதுக்குள் பூட்டிவைத்துக்கொண்டு உலாவும் கிராமத்து ஆசிரியை என நடிப்பில் பல பரிமாணங்களில் மிளிர்கிறார் சினேகா.
கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம் என அனைத்து பொறுப்புகளையும் சிறப்பாக செய்திருக்கும் தங்கர்பச்சான், கிராமத்து அப்பாவி விவசாயியாகவும் நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார்.
கிராமத்து பள்ளிப் பருவம், மாணவப் பருவத்து நட்பு என நம்மையும் நமது பள்ளிப்பருவத்துக்கு இழுத்துச் செல்கிறது படம்.
இந்த நூலிழை இடைவெளியில் ஒரு மெல்லிய காதலையும் பிண்ணி, க்ளைமாக்ஸ் காட்சியில் கண் கலங்க வைக்கிறார் தங்கர்.
கிராமத்து மண்வாசனையை கேமராவிலும் மணக்க வைக்கிற வித்தை தங்கருக்கு மட்டுமே கைவந்த கலை.
தேவையே இல்லாத சில பாடல் காட்சிகளை நீக்கி, விறுவிறுப்பை கூட்டியிருந்தால் 'பள்ளிக்கூடம்' பசுமையான நினைவுகளாக நம் மனதை முழுமையாக ஆக்கிரமித்திருக்கும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| இதிகாசங்கள் & கட்டுரைகள் - தாய், தந்தையர் என்பவர் யார் என்பதையும், அவர்களுக்கு ஆற்றவேண்டிய கடைமைகளையும் சிறப்பாக எடுத்துரைக்கிறது... |
| |
|
|
|
|
 | | FE |
| | | தொட்டால் பூ மலரும் | | பிரம்மாண்டமான காட்சிகள், யுவன் சங்கர் ராஜாவின் இசை, பாலிவுட் நடிகைகளைப் போன்ற தோற்றத்துடன் கூடிய... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - முகத்தில் கரும்புள்ளியா..? கவலை வேண்டாம், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க இதோ ஒரு சூப்பர் டிப்ஸ்... |
| |
|
|
|
|
|
|
|