|
| தொட்டால் பூ மலரும் | |
கோலிவுட்டில் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே வந்துள்ள பி.வாசுவின் படம். தனது மகனை நாயகனாகக் களமிறக்குவதால், அதிக அளவிலான சிரத்தையுடன் செயல்பட்டிருப்பது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.
டுடோரியல் கல்லூரி ஆசிரியர் தியாகராஜனின் (நாசர்) மகன் ரவி (ஷக்தி). அஞ்சலியை (கெளரி முன்ஜால்) கண்டதும் காதலுறுகிறார். இதற்கு, வில்லியாக வருகிறார் நாயகியின் கோபக்கார - கோடீஸ்வர அம்மா பெரிய நாயகியிடம் (சுகன்யா), 'அஞ்சலியை மணம் முடிப்பேன்' என்று சவால் விட்டுக் கிளம்புகிறார் ரவி.
தனது மகளைப் பாதுகாக்க, மும்பையில் தாதாவாகவுள்ள தனது சகோதரர் வரதராஜ வாண்டையாரிடம் (ராஜ்கிரண்) அஞ்சலியை ஒப்படைக்கிறார் பெரிய நாயகி. அதன்பின், ரவி தனது சவாலை நிறைவேற்றுவதற்கு என்னென்ன செய்கிறார் என்பதே 'தொட்டால் பூ மலரும்'.
தமிழ் சினிமாவில் தொன்றுதொட்டு காணப்படும் வகையறா காதல் கதையையே முழுமையாக நம்பியிருக்கிறார் இயக்குனர். ஆனால், திரைக்கதையிலாவது புதுமை புகுத்த முயன்றிருப்பார் என்று பார்த்தால், அதுவும் இல்லை. 'ஓல்ட் வைன் இன் நியூ பாட்டில்' என்ற வாசகமே நினைவுக்கு வருகிறது.
அதேநேரத்தில் காமெடி, அதிரடி, பாடல்கள், சென்டிமென்ட் ஆகியவற்றுக்கு சரிவிகித முக்கியத்துவம் கொடுத்து, ரசிகர்களை ஓரளவு கட்டிப்போட முயற்சி செய்திருப்பது ஆறுதலுக்குரியது.
அடுத்தப் படத்தில் நல்ல கதை சிக்கினால், ஆடலிலும் அதிரடியிலும் ஜொலிக்கும் ஷக்தி, வெற்றிக்கொடி நாட்டப்போவது உறுதி. பல இடங்களில் ஒரு சில நாயகர்களின் தாக்கம் தெரிந்தாலும், நல்ல வாய்ப்புக் கிடைத்தால் அவர் தனது தனித்தன்மையை நிரூபித்துவிடுவார் என்பதில் ஐயமில்லை.
நாயகி கெளரி முன்ஜாலும் பாஸ் மார்க்கை தட்டிச் செல்கிறார். இப்படத்தில் வில்லியாக புரோமோஷன் பெற்றிருக்கும் சுகன்யா தனது கண்களாலேயே கோப உணர்வுகளை சிறப்பாக வெளியிடுத்தியிருக்கிறார். ராஜ்கிரணுக்கு தாதா பாத்திரமா... சொல்லவே வேண்டாம்; வழக்கம்போல் கம்பீரம். வடிவேலின் காமெடி, 'கிளம்பிட்டாரய்யா...' என்று சொல்ல வைக்கிறது.
யுவன் சங்கர் ராஜாவின் இசையும், அசோக்குமாரின் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம் சேர்ப்பவை. 'தளபதி' தினேஷின் சண்டைக்காட்சிகளும் பாராட்டுக்குரியது.
பிரம்மாண்டமான காட்சிகள், யுவன் சங்கர் ராஜாவின் இசை, பாலிவுட் நடிகைகளைப் போன்ற தோற்றத்துடன் கூடிய நாயகி, பிரம்மிக்க வைக்கும் கதைக்களம், பாடல்களுக்கு ஃபாரின் லொக்கேஷன்ஸ், தேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு, நட்சத்திர பட்டாளங்களின் அணிவகுப்பு என தன்னுடையை மகன் ஷக்திக்கு நல்ல துவக்கத்தை அளிப்பதற்கு பாடுபட்டுள்ளார் சாதனைப்படமான 'சந்திரமுகி'யை இயக்கிய வாசு.
இத்தனையும் செய்தவர், கதையிலும் திரைக்கதையிலும் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், வெற்றிப் பூ மலர்ந்திருக்கும்!
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| இதிகாசங்கள் & கட்டுரைகள் - பிரதோஷத்தின் போது வழிபாடு செய்தால் வறுமை,பயம், பாவம், மரண வேதனை இவைகள் எல்லாம் விலகும். நன்மைகள்... |
| |
|
|
|
|
 | | FE |
| | | கிரீடம் | | நீண்ட இடைவெளிக்கு பிறகு 'தல' அஜீத்துக்கு பொருத்தமாக அமைந்துள்ள படம் 'கிரீடம்'.
ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்து குடும்பம் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் எப்படி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உருவத்தில் பெரிதாக இருப்பதானாலோ என்னவோ, நம்மில் பலரும் பரங்கிக்காயை உதாசீனப்படுத்திவிடுகிறோம்... |
| |
|
|
|
|
|
|
|