யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா விமர்சனம்
வீராப்பு
- மு.பெருமாள்
லைநகரத்தை தொடர்ந்து, சுந்தர்.சி 'நல்ல' ரவுடியாக நடித்திருக்கும் மற்றொரு படம். முன்னதைவிட இதில் சுவாரஸ்யம் குறைவு.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. மகன் சுந்தர்.சியிடம் பிரகாஷ்ராஜ் காட்டும் அளவுக்கு அதிகமான கண்டிப்பு அவரை ரவுடியாக்குகிறது. இதனால் மகனை வெறுத்து ஒதுக்குகிறார்.

ஒரு கட்டத்தில் பிரகாஷ்ராஜ் மீது ஒரு கொலைப்பழி விழ, அவருக்காக போராடி உண்மை குற்றவாளியை கண்டுபிடித்து, 'நான் ரொம்ப நல்ல(வன்) ரவுடி' என்பதை நிரூபிக்கிறார் சுந்தர். சி.

கண்டிப்பான அப்பாவாக பிரகாஷ்ராஜ். வழக்கம் போல, நடிப்பில் ஸ்கோர் பண்ணுகிறார். ரவுடி மகனாக சுந்தர்.சி. அடிதடி காட்சிகளில் முக பாவமும், குரலும் ஒட்ட மறுக்கிறது. பாசத்தில் உருகும் காட்சிகளில் நடிப்பு வர மறுக்கிறது.

வழக்கம் போல் ரவுடியை காதலிக்கும் அப்பாவி டீச்சர் வேடம் கோபிகாவுக்கு. கொடுக்கப்பட்ட ஒன்றிரண்டு காட்சிகளையும் நிறைவாக செய்ய முயன்றிருக்கிறார். (ஆட்டோகிராப் மாதிரி இன்னொரு படம் வர ரொம்ப நாளாகும் போலிருக்கிறது)

படத்தில் இருக்கிற கொஞ்ச, நஞ்ச காமெடியையும் இரட்டை அர்த்த வசனங்கள் கெடுத்து விடுகின்றன.

கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சிகளை படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் செல்வராஜ். பாடல்கள் வசனநடையில் இருந்தாலும் ரசிக்க வைக்கிறது டி. இமானின் இசை.

எப்படியாவது ஒரு படத்தை இயக்கி, கமர்ஷியலாக வெற்றிபெற வைத்துவிட வேண்டும் என்ற இயக்குனர் பத்ரியின் 'வீராப்பு', படத்தில் தெரிகிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கிரீடம்
ஹாரிபாட்டரும் 5 ஃபீனிக்ஸ் கட்டளையும்
என்னைப்பார் யோகம்வரும்
அபோகலிப்டோ (ஆங்கிலம்)
துள்ளல்
சிவாஜி
ஆன்மீகம்
இதிகாசங்கள் & கட்டுரைகள் - பிரதோஷத்தின் போது வழிபாடு செய்தால் வறுமை,பயம், பாவம், மரண வேதனை இவைகள் எல்லாம் விலகும். நன்மைகள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
கிரீடம்
நீண்ட இடைவெளிக்கு பிறகு 'தல' அஜீத்துக்கு பொருத்தமாக அமைந்துள்ள படம் 'கிரீடம்'. ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்து குடும்பம் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் எப்படி...
ஹாரிபாட்டரும் 5 ஃபீனிக்ஸ் கட்டளையும்
என்னைப்பார் யோகம்வரும்
ஆரோக்கியம்
நலம் காக்க - உருவத்தில் பெரிதாக இருப்பதானாலோ என்னவோ, நம்மில் பலரும் பரங்கிக்காயை உதாசீனப்படுத்திவிடுகிறோம்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace