|
| கிரீடம் | |
நீண்ட இடைவெளிக்கு பிறகு 'தல' அஜீத்துக்கு பொருத்தமாக அமைந்துள்ள படம் 'கிரீடம்'.
ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்து குடும்பம் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் எப்படி தங்களது நிம்மதியை தொலைக்கிறது என்பதை தத்ரூபமாக காட்டியிருக்கிறார்கள்.
போலீஸ் ஏட்டு ராஜ்கிரணுக்கு, தனது மகன் அஜீத்தை சப் இன்ஸ்பெக்டராக்கி பார்க்க வேண்டும் என்பது கனவு. அஜீத்தும் அதற்கான முயற்சிகளில் இறங்குகிறார்.
இந்நிலையில், ஒரு எம்எல்ஏவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ராஜ்கிரண் கோடியக்கரைக்கு மாற்றப்படுகிறார். அங்குள்ள ஒரு தாதாவை கண்டிக்கும் ராஜ்கிரண் தாக்கப்படுகிறார். இதனால் பொங்கியெழும் அஜீத் தாதாவை அடித்து நொறுக்கிறார்.
இதனால், அப்பகுதி மக்கள் புது தாதாவாக அஜீத்தை பார்க்க, அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறார் அஜீத். இதனால் அவரது போலீஸ் வேலையும் கேள்விக்குறியாகிவிடுகிறது. இவற்றிலிருந்து அஜீத் எப்படி மீள்கிறார் என்பது க்ளைமாக்ஸ்.
வழக்கமான தமிழ் பட கதாநாயகி வேடம் த்ரிஷாவுக்கு. நாயகனிடம் வழிந்து, நான்கு பாடலுக்கு வந்து ஆட்டம் போடுவதோடு சரி. அப்புறம் ஆள், 'எஸ்கேப்'.
நீண்ட நாளைக்கு பிறகு, இயல்பான துறு துறு அஜீத். அப்பா பாசத்தில் உருகுவதும், தாதா இமேஜிலிருந்து விடுபட முடியாமல் தவிப்பதும் என நடிப்பில் தனி முத்திரை பதிக்கிறார்.
ஜி.வி.பிரகாஷின் இசையில், தியேட்டரை விட்டு வெளியே வந்த பிறகு பாடல்கள் மறந்துவிடுகின்றன.
தனது முதல் படத்திலேயே ஆக்சன் ப்ளஸ் சென்டிமெண்ட் கலந்து விருந்து படைத்திருக்கிறார் புதுமுக இயக்குனர் விஜய்.
ஓவர் சென்டிமெண்ட்டை குறைத்து, இடைவேளைக்கு பின்னரும் படத்தில் விறுவிறுப்பை கூட்டியிருந்தால், 'கிரீடம்' இன்னும் சிறப்பாய் ஜொலித்திருக்கும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| இதிகாசங்கள் & கட்டுரைகள் - பால்குடம் எடுப்பது ஏன்? என்பது குறித்து 'இந்து மதமும் அதன் வழிமுறைகளும்' என்ற நூலில் கீழ்கண்டவாறு... |
| |
|
|
|
|
 | | PR |
| | | அபோகலிப்டோ (ஆங்கிலம்) | | கம்யூட்டர் யுகத்தில் மனிதன் மாறிவிட்டான். நாகரகத்திலும் ஏற்றம் கண்டாகிவிட்டது. ஆனால், இதே மனிதன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உருவத்தில் பெரிதாக இருப்பதானாலோ என்னவோ, நம்மில் பலரும் பரங்கிக்காயை உதாசீனப்படுத்திவிடுகிறோம்... |
| |
|
|
|
|
|
|
|