|
| ஹாரிபாட்டரும் 5 ஃபீனிக்ஸ் கட்டளையும் | |
உலகம் முழுவதும் ஹாரிபாட்டர் ஜூரம் பற்றியெரியும் வேளையில், திரைப்படமாக வந்திருக்கிறது 'ஹாரிபாட்டரும் 5 ஃபீனிக்ஸ் கட்டளையும்'.
மந்திர சக்திகளை கொண்ட ஹாரி, கோடை விடுமுறை முடிந்து தனது மந்திரக் கல்லூரிக்கு திரும்புகிறான். இந்நிலையில் தீயசக்திகளின் தலைவனான லார்ட் வார்டிமோர்ட் மீண்டும் தனது நாச வேலைகளை தொடங்குகிறான்.
இதனால் கொதித்தெழும் ஹாரி, லார்ட் வார்டிமோர்ட்டுக்கு முடிவு கட்ட புறப்படுகிறான். ஆனால், கல்லூரிக்கு புதிதாக வரும் பெண் பேராசிரியர், மந்திரசக்திகளை பயன்படுத்த ஹாரிக்கு தடை விதிக்கிறார்.
பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும், மாணவர் படைகளை திரட்டி தீயசக்திகளை ஹாரி எப்படி அழிக்கிறான் என்பதை பிரமிப்பூட்டும் வகையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் டேவிட் யேட்ஸ்.
இளைஞர்களின் அடிதடியோடு அட்டகாசமாக தொடங்கிறது படம். அழிவு சக்திகள் ஏவிவிடும் பிணம் தின்னிகளுக்கும். ஹாரிபாட்டரின் மாணவர் படைக்கும் இடையே நடக்கும் மோதல்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.
க்ளைமாக்ஸ் காட்சியில், ஒரு ரகசிய அறைக்குள் ஹாரியும், தீய சக்திகளின் தலைவனான வால்டிமோர்ட்டும் நேருக்கு நேர் மோதிக்கொள்வது மெய்கூச்செரிய வைக்கும் காட்சிகள்.
படத்துக்கு காமிராவும், பின்னணி இசையும் பக்க பலம்.
டேனியல் ரெட் கிளிப், ருபெர்ட் கிரின்ட், எம்மா வாட்சன் மற்றும் இவானா ஆகியோர் நடித்துள்ளனர்.
பிரபலமான வார்ன் பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை விறுவிறுப்பு குறையாமல் இயக்கியுள்ளார் டேவிட் யேட்ஸ்.
ஹாரிபாட்டரின் வித்தைகளை குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் ரசிக்கலாம்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| இதிகாசங்கள் & கட்டுரைகள் - பால்குடம் எடுப்பது ஏன்? என்பது குறித்து 'இந்து மதமும் அதன் வழிமுறைகளும்' என்ற நூலில் கீழ்கண்டவாறு... |
| |
|
|
|
|
 | | PR |
| | | அபோகலிப்டோ (ஆங்கிலம்) | | கம்யூட்டர் யுகத்தில் மனிதன் மாறிவிட்டான். நாகரகத்திலும் ஏற்றம் கண்டாகிவிட்டது. ஆனால், இதே மனிதன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உருவத்தில் பெரிதாக இருப்பதானாலோ என்னவோ, நம்மில் பலரும் பரங்கிக்காயை உதாசீனப்படுத்திவிடுகிறோம்... |
| |
|
|
|
|
|
|
|