|
| என்னைப்பார் யோகம்வரும் | |
தங்களது சொந்தக் கதை, சோகக் கதைகளை சொதப்பல் சினிமாவாக எடுக்கும் போக்கு நடிகர்களிடையே அதிகரித்து வருகிறது. அதற்கு லேட்டஸ்ட் உதாரணம் மன்சூரலிகானின் 'என்னைப்பார் யோகம்வரும்'.
அடியாள் வேலைபார்க்கும் ஜெகா (மன்சூர் அலிகான்), எம்.எல்.ஏ. முத்தம்மா (அனுராதா) தரும் பணத்துக்காக அவரது மகன் திருமணத்தை தடுத்து நிறுத்துகிறான்.
இதனால் அதிர்ச்சியடையும் புதுப்பெண் ஜெகதீஸ்வரியின் (அறிமுகம் மஞ்சு) தந்தை மரணம் அடைகிறார். மன்சூரை பழிவாங்க அவர் மீது கற்பழிப்பு புகார் கொடுக்கிறார் மஞ்சு. இறுதியில் உண்மை தெரிய, மன்சூர் மீது காதல் பிறக்கிறது. அப்புறம் என்ன? காதல், மோதல், அடிதடி இறுதியில் சுபம்.
நிஜத்தில் இருப்பதை விட படத்தில் கூடுதல் கோமாளித்தனம் செய்கிறார் மன்சூர். சிறுவர்களுடன் கோலி விளையாடியபடி கும்மாளம் போடுவாராம். திடீரென அடியாளாகி அடிதடி என பின்னி பெடலெடுப்பாராம். பொறுமையை ரொம்பவே சோதிக்கிறார்கள்.
எம்எல்ஏவாக வரும் அனுராதா, விலைமாதுவாக வரும் அபிநயஸ்ரீ, காதல் ஜோடிகளாக குட்டி-பிரியங்கா ஷைலு ஆகியோர் கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார்கள். நெல்லை சிவா, போண்டா மணி, கொட்டாச்சி, கிங்காங் கூட்டணியின் காமெடி, செம 'கடி'.
படத்தில் பெரும்பாலான காட்சிகள் மெகா சீரியல் டைப்பில் இழுவை. சுமாரான இசையில் `கோயம்பேடு கொய்யாப் பழம்', 'போலீசே போலீசே' பாடல்கள் சிறிது ஆறுதல். காமெடி, கவர்ச்சி எல்லாம் இருந்தும் அதை மிக்ஸ் செய்த விதத்தில் கோட்டை விட்டிருக்கிறார்கள்.
சினிமா ஆசைக்காக இதுபோன்ற படங்களில் நடிப்பது விஷப் பரீட்சை என்பதை யாராவது திருமாவுக்கு சொன்னால் தேவலை.
படத்தில் கதை, பாடல்கள் எழுதி, வில்லன் மற்றும் கதாநாயகனாக நடித்திருப்பதோடு பாடவும் செய்திருக்கிறார் மன்சூர்.
தனது சொந்த கதையை சினிமாவாக எடுக்க, மற்ற நடிகர்களை போல் தயாரிப்பாளர்கள் தலையில் மிளகாய் அரைக்காமல் தானே சொந்தமாக பட தயாரிப்பில் இறங்கிய மன்சூரின் அலிகானின் துணிச்சலை பாராட்டியே ஆகவேண்டும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
|
|
|
 | | FE |
| | | சிவாஜி | | பிரமாண்டங்களை பிலிமுக்குள் கொண்டு வருகிற ஷங்கர், வெற்றியை மட்டுமே இலக்காக கொண்ட ஏவி.எம்.நிறுவனம்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - சிக்குன் குனியா... இந்தப் பெயரைக் கேட்டாலே மக்களிடையே ஒருவித பீதி ஏற்படுகிறது... |
| |
|
|
|
|
|
|
|