யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா விமர்சனம்
துள்ளல்
- சுந்தர்
ப்பாவிப் பெண்களை காதலிப்பது போல் நடித்து, அனுபவித்து, உதறிவிட்டு செல்லும் காமுகன் சீனு. இவனது ஆசைக்கு பலியானவள் ஸ்ருதிகா.

அபார்ஷன் செய்வதையே தொழிலாக கொண்ட கிளினிக்கில் வேலை பார்ப்பவள் காயத்ரி. ஆண்களிடம் ஏமாறும் பெண்கள் கருக்கலைப்பு செய்வதை கண்டு ஆண்வர்க்கம் மீதும், காதல் மீதும் வெறுப்பில் இருக்கிறாள்.

காயத்ரியையும் தனது காதல் வலையில் விழவைத்து வேட்டையாட திட்டமிடுகிறான் சீனு. ஆனால் காயத்ரியிடம் பாச்சா பலிக்காததால் அவளையே திருமணமும் செய்கிறான்.

ஆனால் தான் விரும்பும் வரை தன்னை தொடக்கூடாது என்கிறாள் காயத்ரி. ஊட்டிக்கு தேனிலவு செல்கின்றனர். அங்கு டூரிஸ்ட் கைடாக இருக்கும் ஸ்ருதிகாவை சந்திக்கின்றனர். சீனுவை உண்மைகள் வெளியாகின்றன. முடிவு என்ன என்பதை 'துள்ளல்' மீதி கதை.

இயக்குனர் பிரவீன்காந்த் தான் நாயகன். சீனு என்கிற வில்லத்தனம் நிறைந்த நாயகன் வேடம் அவருக்கு மிக அருமையாக பொருந்துகிறது.

அறிமுக நாயகிகள் குர்லின் சோப்ரா, ஸ்ருதிகாவாக வருகிறார். காயத்ரியாக வரும் சோனிகாவும் சோடை போகவில்லை. கவர்ச்சியிலும் இருவரும் கலக்கியுள்ளனர்.

முன்பாதி விறுவிறுப்பாக நகர்கிறது. ஊட்டிக்கு சென்றதும் சிறிது வேகத்தடை. படமே கலகலப்பும் விறுவிறுப்புமாக நகர்வதால் விவேக்கின் காமெடி ஓவர்டோஸ் ஆகி விடுகிறது. விவேக்கை மந்திரவாதி திசைமாற்றுவதை மட்டும் ஓரளவு ரசிக்கலாம். மற்றவை எல்லாம் இரட்டை அர்த்த ஆபாசத் தோரணங்கள்.

தினாவின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம் என்றாலும் ஆறு பாடல்கள் அதிகம்.

சிம்புவின் 'மன்மதன்' ரக கதை தான். ஆங்காங்கே தென்படும் இரட்டை அர்த்த வசனங்களையும், தேவையற்ற சில காட்சிகளையும் தவிர்த்திருந்தால் 'துள்ளல்' ரசிகளை தூண்டில் போட்டு இழுத்திருக்கும்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சிவாஜி
பிறப்பு
கருப்பசாமி குத்தகைதாரர்
நினைத்து நினைத்து பார்த்தேன்
நினைத்தாலே
பெரியார்
ஆன்மீகம்
இதிகாசங்கள் & கட்டுரைகள் - பிரதோஷத்தின் போது வழிபாடு செய்தால் வறுமை,பயம், பாவம், மரண வேதனை இவைகள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
சிவாஜி
பிரமாண்டங்களை பிலிமுக்குள் கொண்டு வருகிற ஷங்கர், வெற்றியை மட்டுமே இலக்காக கொண்ட ஏவி.எம்.நிறுவனம்...
பிறப்பு
கருப்பசாமி குத்தகைதாரர்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - சிக்குன் குனியா... இந்தப் பெயரைக் கேட்டாலே மக்களிடையே ஒருவித பீதி ஏற்படுகிறது...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace