|
| பிறப்பு |
விஜய் கிருஷ்ணராஜ்-சுலக்ஷனா தம்பதியின் மகன் பிரபாவை, மகாதேவன்-சரண்யா தம்பதியினர் தத்து எடுக்கின்றனர்.ஆனால் சாதிவிட்டு சாதி போய், வேறு இடத்தில் சுவீகாரம் எடுத்ததுபிடிக்காத சரண்யாவின் தம்பி சண்முகராஜன் இதை எதிர்க்கிறார்.
பிரபா, கல்லூரி மாணவி மயூகாவை காதலிக்கிறார்.அதே சமயம் சண்முகராஜனின் மகள் கார்த்திகாவும் பிரபாவை விரும்புகிறார்.இதனையறிந்த சண்முகராஜன், இருவரும் விரும்புவதாக எண்ணி மாப்பிள்ளை கேட்டு பிரபாவின் வீடு செல்ல, பிரபாவோ தான் கார்த்திகாவை விரும்பவில்லை என்று கூறிவிடுகிறார். இதனால் பகை மேலும் வளர்கிறது.
தத்தெடுத்த கதை தெரியாமல், பெற்றோருக்கு பிரபா கொள்ளிவைக்கும்போது , அவர் வேறு சாதியிலிருந்து தத்தெடுக்கப்பட்டவர் என்று கூறி எதிர்ப்பு வருகிறது. முடிவு என்ன என்பது மீதிக் கதை.
சுவீகாரம் கொடுத்த பெற்றோரின் பாசப் போராட்டத்தை சொல்வதா அல்லது சுவீகாரப் பிள்ளையின் மன வலியை சொல்வதா, அல்லது இடையில் ஒரு முக்கோணக் காதல் கதையை நகர்த்துவதா என்ற குழப்பம் இயக்குனருக்கு ஏற்பட்டிருப்பது தெரிகிறது.
ஒளிப்பதிவும், இசையும் படத்தில் ஆறுதலான அம்சங்கள் .
இயக்குனர் எல்.வி. இளங்கோவன், சொல்ல வந்ததை குழப்பமில்லாமல் சொல்லியிருந்தால் 'பிறப்பு' சிறப்பாக இருந்திருக்கும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
|
|
|
 | | FE |
| | | சிவாஜி | | பிரமாண்டங்களை பிலிமுக்குள் கொண்டு வருகிற ஷங்கர், வெற்றியை மட்டுமே இலக்காக கொண்ட ஏவி.எம்.நிறுவனம்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - சிக்குன் குனியா... இந்தப் பெயரைக் கேட்டாலே மக்களிடையே ஒருவித பீதி ஏற்படுகிறது... |
| |
|
|
|
|
|
|
|