|
| பெரியார் | |
பெரியார் என்ற ஒரு சகாப்தத்தையே ஒரு திரைப்படம் மூலம் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குனர்.
பெரியார் இளைஞனாக இருக்கும்போது கதை தொடங்குகிறது. அவர் கலகக்காரராக, எதிர்ப்பாளராக, போராளியாக, தலைவராக உயர்ந்து மரணம் அடைவது வரையிலான வாழ்க்கை வரலாறை சித்தரிக்கிறது படம்.
பெரியாரின் முற்போக்கு சிந்தனைகள், போராட்டக் குணம், அவர் சந்தித்த மனிதர்கள் என அவரது அனைத்து பரிமாணங்களையும் படத்தில் கொண்டு வர முயன்றிருக்கிறார்கள்.
காந்தி, அம்பேத்கார், திரு.வி.க., ராஜாஜி, அண்ணா, கருணாநிதி என பல்வேறு தலைவர்களுடன் அவர் கொண்டிருந்த நட்பு, பழகியவிதம் ஆகியவை நம்மை வியக்க வைக்கிறது.
பெரியாராக வாழ்ந்திருக்கும் சத்யராஜ் ஒட்டுமொத்த பாராட்டுகளையும் அள்ளிக் கொள்கிறார். இளம் பருவம் தொடங்கி, முதுமை வரை ஒன்பது தோற்றங்களில் வருகிறார் சத்யராஜ். வயதான தோற்றத்தில் அனைவரையும் தன்வசப்படுத்தி விடுகிறார்.
அடுத்து, நடிப்பில் ஸ்கோர் பண்ணுவது ஜோதிர்மயி. நாகம்மையாக வரும் அவர், தோற்றம் மற்றும் நடிப்பில் சத்யராஜுடன் போட்டி போடுகிறார்.
மணியம்மையாக வருகிறார் குஷ்பூ. கதாபாத்திரத்தையும் தாண்டி குஷ்பூவின் முகம் தெரிவதைத் தவிர்க்கமுடியவில்லை. இவ்வளவு சர்ச்சைக்களுக்கு மத்தியில் இவரை நடிக்க வைத்தது ஏனோ?
பெரியாரின் தந்தையாக வரும் தெலுங்கு சத்யநாராயணா, தயாராக மனோரமா, தங்கையாக லாவண்யா நடித்துள்ளனர். கி.வீரமணியாக வரும் விஜய்ஆதிராஜ் அச்சு அசலாக இருக்கிறார். அண்ணாவாக வரும் இயக்குநர் ஸ்டேன்லியும், ராஜாஜியாக வரும் ஆர்த்தி குமாரும் நல்ல தேர்வு.
இளமை முதல் முதுமை வரை ஒரே தோற்றத்தில் வருகிறார் ராஜாஜி. அது எப்படி? காந்தியாக வரும் ஜார்ஜ் பால், அம்பேத்கராக வரும் மோகன்ராம், எம்.ஆர்.ராதாவாக வரும் வாசுவிக்ரம், காமராஜராக வரும் அண்ணாமலை போன்ற அனைவருமே சரியாக தேர்வு.
| | (மூலம் - வெப்துனியா) |
|
| |
| | | |
|
|
|
|
|
|
|
|
 | | FE |
| | | த்ரிஷா | | தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்களை தனது குழந்தைத்தன... |
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
|