யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா விமர்சனம்
உன்னாலே உன்னாலே
- சுந்தர்
Unnale
Fourth Eye
'எதையும் இலகுவாக எடுத்துக் கொள்வது', 'எல்லாருடனும் ஜாலியாகவும் சகஜமாகவும் பழகுவது' கார்த்திக்கின் குணாதிசயம். ஆனால், 'எதையும் தோண்டித் துருவி ஆழ்ந்து பார்ப்பது', 'தன்னைத் தவிர பிற பெண்களைப் பார்ப்பதைக் கூட பொறுத்துக்கொள்ளாதது', 'எதற்கு எடுத்தாலும் கேள்வி கேட்பது' ஜான்சியின் இயல்பு.

இந்த முரண்பட்ட இயல்புகள் கொண்ட கார்த்திக்கும், ஜான்சியும் காதலிக்கின்றனர். காதலர்கள் இருவரும் ஊடலால் பிரிந்திருந்த தருணத்தில் அவர்களது வாழ்க்கையில் குறுக்கிடுகிறாள் தீபிகா. அதன்பின் நடக்கும் நிகழ்வுகளும், முடிவும்தான் 'உன்னாலே உன்னாலே'.

சிறு விஷயத்தைப் பெரிதுபடுத்தி, இருக்கிற நிம்மதி, சந்தோஷத்தைக் கெடுத்துக் கொள்வது ஓர் உளவியல் கோளாறு. இப்படிப்பட்ட குணச்சித்திரத்தை ஒரு கதாபாத்திரமாக்கி, அதையே கதைக்கு வேகத்துக்கும் விறுவிறுப்புக்கும் தளமாக்கி இருக்கும் இயக்குநரின் சாமர்த்தியம் பாராட்டுக்குரியது.

கார்த்திக்காக புதுமுகம் வினய். அனுபவ முகம் போல மின்னுகிறார். சதா, ஜான்சியாக ஸ்கோர் செய்கிறார். எப்போதும் சந்தேகத்தை மட்டுமே வெளியிடும் கண்கள்; உள்ளுக்குள் மறைந்திருக்கும் மனக் குறுகுறுப்பை வெளியிடும் முகம்... என சதா, சதம் அடிக்கிறார் நடிப்பில்.

தீபிகாவாக வரும் தனிஷா புதுமுகமாம். பொய் சொல்லியிருக்கிறார்களோ என நினைக்கிற அளவிற்கு, கலகல நடிப்பில் பழைய முகம் போல பளிச்சிடுகிறார். இப்படி பாத்திரமறிந்து வாய்ப்பு கொடுத்து ஒவ்வொருவரையும் மிளிர வைத்துள்ளனர்.

படம் முழுக்க இளமையும், குறும்பும், கலாட்டாவும், ஜாலியும் என 'யூத்' கொடி பறக்கிறது. ஆஸ்திரேலியாவின் அழகையும் தன் கேமராவில்அள்ளிவைத்து கொடுத்திருக்கிறார் ஜீவா.

படத்தில் இன்னொரு நாயகன் என்று வசனம் எழுதியிருக்கும் எஸ். ராமகிருஷ்ணனை அடித்துக் கூறலாம். அவரை முதுகு வலிக்க தட்டிக் கொடுத்துப் பாராட்டலாம்.


(மூலம் - வெப்துனியா)
1| 2
 
மேலும்...
நான் அவன் இல்லை
சபரி
மொழி
பருத்திவீரன்
பச்சைக்கிளி முத்துச்சரம்
போக்கிரி
ஆன்மீகம்
இதிகாசங்கள் & கட்டுரைகள் - பால்குடம் எடுப்பது ஏன்? என்பது குறித்து 'இந்து மதமும் அதன்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
நான் அவன் இல்லை
பெண்கள் பலரை ஏமாற்றி திருமணம் செய்து, காரியம் முடிந்ததும்...
பருத்திவீரன்
மொழி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - அதிர்ச்சியில் மயக்கம் எதிர்பாராத விதமாக ஏதேனும்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace