யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா விமர்சனம்
நான் அவன் இல்லை
- சுந்தர்
Nan avan illai
FE
பெண்கள் பலரை ஏமாற்றி திருமணம் செய்து, காரியம் முடிந்ததும் கழற்றி விட்டு ஓடிவிடும் ஒரு ப்ளேபாயின் கதை. அந்தப் ப்ளேபாய்தான் ஜீவன்.

தொழிலதிபர் விக்னேஷ் என்கிற பெயரில் மாளவிகாவிடம் மையம் கொள்கிறார். மணம் முடிக்கிறார். பிரபல ஒவியர் ஜாகீர் உசேன் பெயரில் சினேகாவை ஏமாற்றி பணம் பெற்றுக் கொள்கிறார். மாதவன் மேனன் என்று மலையாளியாக நடித்து ஜோதிர் மயியை 'பிரேமிச்சு' விவாஹம் செய்கிறார்.

தொடர்ந்து, ஹரிதரதாஸ் என்ற போலிச் சாமியார் வேடம் பூண்டு கீர்த்தி சாவ்லாவை மயக்கி தாலி கட்டுகிறார். ஷாம் பிரசாத் என்கிற பெயரில் தொழிலதிபர் நமீதாவிடம் மேனேஜராகிறார். நெருங்கி 'பர்சனல்' மேனேஜராகி கவிழ்த்துவிடுகிறார். இவ்வளவு பேரையும் ஏமாற்றிய ஜீவன் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்.

இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொருவர் குற்றம் சாட்டும் போதும் "நான் அவன் இல்லை" என்று மறுக்கும் ஜீவன், தன் பெயர் இப்போது அண்ணாமலை என்கிறார். தான் ஓர் அப்பாவி என்கிற ஜீவன், அவர்கள் ஏமாந்தது அவரவர் பேராசையால்தானே தவிர, அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்கிறார்.

சந்தேகத்தின் பலனை குற்றவாளிக்கு சாதமாக்கி ஜீவனை விடுதலை செய்கிறார் நீதிபதி லட்சுமி. சே... அநியாயமா இருக்கே என்று நினைக்கிறபோது, அந்த எதிர்பாராத க்ளைமாக்ஸ்.

அந்தக் காலத்து "நான் அவனில்லை" தான் இப்போது ரீமேக் ஆகி வந்துள்ளது. ஜெமினி நடித்த அந்தப் படத்தில் ஜெமினியால் முடியாததை இந்தப் படத்தில் ஜீவன் செய்திருக்கிறார். ஐந்து பேரை ஏமாற்றும் காட்சிகளில் பஞ்சமுகம் காட்டுகிறார். பஞ்ச பூதம் போல ஒவ்வொன்றும் ஒரு ரகம். வளைத்துப் போட வசீகரமும், அதற்குள் ஒளிந்திருக்கும் கள்ளத் தனமும் கலந்த மாதிரி முகம் ஜீவனுக்கு இருப்பது பொருத்தம்.

ஜீவன் ஒரே நபராக நடிப்பைக் காட்டி கவர்வதை, அவருடன் ஜோடி போடும் ஐவர் அணி கவாச்சி காட்டி ஈடு செய்கிறது.

கவர்ச்சி விருந்து வைப்பதிலும் தங்களை காட்சிப்படுத்துவதிலும், அவர்களுக்கும் தனித்தனி போட்டியே நடக்காத குறைதான். அந்த அளவுக்கு தாராள தரிசனம்.


(மூலம் - வெப்துனியா)
1| 2
 
மேலும்...
சபரி
மொழி
பருத்திவீரன்
பச்சைக்கிளி முத்துச்சரம்
போக்கிரி
தாமிரபரணி
ஆன்மீகம்
இதிகாசங்கள் & கட்டுரைகள் - பிரபஞ்சம் முழுவதும் மாயாசக்தியின் சொரூபம். மாயை...
மேலும் படிக்க|மேலும்...
ஜோதிடம்
AP
 
ரிக்கி பான்டிங்
உலகின் வலுவான கிரிக்கெட் அணியின் கேப்டனான இவர்...
பிரையன் லாரா
மஹேந்திர சிங் தோனி
சினிமா
முன்னோட்டம் - 'வாழ்க்கையில் ஆசைப்படுவது எதுவும் கிடைத்திராத ஓர்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace