யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா முன்னோட்டம்
வெண்ணிலா கபடி குழு - முன்னோட்டம்
சுசீந்திரன் இயக்கத்தில் இமே‌ஜின் கி‌ரியேஷன்ஸ் தயா‌ரித்திருக்கும் படம், 'வெண்ணிலா கபடி குழு'. இதில் விஷ்ணு, சரண்யா மோகன், கிஷோர் நடித்துள்ளனர்.

Vennila Kabhadi Kuzhu
WD
தமிழர்களின் வீர விளையாட்டான கபடி தான் படத்தின் கதைக்களம். கபடியில் பெ‌ரிய ஆளாக வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்களும், அவர்களை ஒன்றிணைத்து பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளரும் தான் படத்தின் பிரதான கேரக்டர்கள்.

இதுவரை தமிழ் சினிமாவில் கபடி விளையாட்டை முறையாக காட்சிப்படுத்தியது இல்லை. அந்தக் குறையை 'வெண்ணிலா கபடி குழு' போக்கும். கபடிக்கு நடுவில் இனிமையான காதலும் உண்டு. சரண்யா மோகன் கிராமத்துப் பெண்ணாக வருகிறார். அவரை காதலிப்பவராக விஷ்ணு.

வி. செல்வ கணேஷின் இசையில் பாடல்கள் ஹிட்டாகியிருப்பது படத்தின் வெற்றிக்கு உதவும். ஒளிப்பதிவு ஜே.லக்ஷ்மண் குமா‌ர். கலை இயக்கம் ‌ஜி.சி. ஆனந்தன்.

'எம் மகன்' படத்துக்கு வசனம் எழுதிய பாஸ்கர் சக்தி தான், இந்தப் படத்துக்கும் வசனம் எழுதியுள்ளார். பிரான்சிஸ் கிருபா, முதன் முறையாக இந்தப் படத்துக்கு பாடல் எழுதியுள்ளார். இவரைத் தவிர நா. முத்துக்குமார், சினேகன், கார்த்திக் நேத்தா ஆகியோரும் பாடல்கள் எழுதியுள்ளனர்.

இமே‌ஜின் கி‌ரியேஷன்ஸ் சார்பில் கே. ஆனந்த் சக்ரவர்த்தி படத்தை தயா‌ரித்துள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தநா 07 அல 4777
திண்டுக்கல் சாரதி - முன்னோட்டம்
அபியும் நானும் - முன்னோட்டம்
ஐந்தாம் படை
அஆஇஈ
கடற்கரை
செய்திகள்
சர்வதேசம் - வன்னியில் இருந்து வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள ஏராளமானவர்களில் இளைஞர்கள், பெண்களை கடத்திச் செல்லும் இலங்கை புலனாய்வுத்துறையினர் அவர்களை கொலை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
படிக்காதவன்: விமர்சனம்
'படிக்காதவன்' என்று பெயர் வைத்ததால் லா‌‌ஜிக் பற்றி எந்த‌க் கவலையும் படாமல், கமர்ஷியல் படத்தை எடுத்துத் தள்ளிவிட்டார் இயக்குனர்.படித்த குடும்பத்தில் படிக்காத ஒரேயொரு கடைக்குட்டி தனுஷ்...
வில்லு - விமர்சனம்
பஞ்சாமிர்தம்
ஆரோக்கியம்
சிகிச்சைகள் - சமையலில் சுவையான காய்கறியாக பரிமாறப்படும் கேரட் பல்வேறு மருத்துவக் குணங்களை தன்னகத்தே கொண்டது...
மேலும் படிக்க|மேலும்...