|
| தநா 07 அல 4777 |
இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற 'டாக்சி நெ. 9211' படம் தமிழில் ரீ-மேக் ஆகிறது. படத்துக்கு வண்டியின் எண் 'தநா 07 அல 4777' என்பதையே தலைப்பாக்கி விட்டனர். ஜீவி பிலிம்ஸ் சார்பில் மகாதேவன் கணேஷ், உஷா வெங்கட்ரமணி ஆகியோர் தயாரித்திருக்கின்றனர்.
இந்தி டாக்சியை அப்படியே தமிழ்படுத்தாமல், தமிழ் ரசிகர்களுக்கு தகுந்தமாதிரி மாற்றங்கள் செய்துள்ளார் இயக்குனர் ஆ.லட்சுமிகாந்தன்.
இந்தியில் ஜான் ஆபிரஹாமுக்கு ஜோடி கிடையாது. தமிழில் அவர் நடித்த வேடத்தில் அஜ்மல் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மீனாட்சி நடிக்கிறார். இருவருக்கும் ஜாலியான டூயட்டும் உள்ளது.
பணக்காரராக அஜ்மலும், டாக்ஸி டிரைவராக பசுபதியும் நடிக்கின்றனர். இந்த நாட்டின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் பணக்காரர்களே காரணம் என ஒருவர் நினைக்க, மற்றவரோ ஏழைகளை ஒழித்துக் கட்டினால்தான் நாடு உருப்படும் என நினைக்கிறார்.
இந்த முரண்பாடான இருவரும் சந்தர்ப்பவசத்தால் சேர்ந்திருக்க நேரும்போது என்ன நடக்கிறது என்பதே கதை. இப்படத்தில் பசுபதி, அஜ்மல், மீனாட்சியுடன் முக்கிய வேடத்தில் சிம்ரனும் நடிக்கிறார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - வாஷிங்டன் நகரில் 20 லட்சம் மக்கள் திரண்ட கோலாகலமான நிகழ்ச்சியில் அமெரிக்காவின் 44-வது அதிபராக, பராக் ஹுசேன் ஒபாமா பதவியேற்றுக் கொண்டார்... |
| |
|
|
|
|
 | | | வில்லு - விமர்சனம் | | விஜய் - பிரபுதேவா கூட்டணியின் உருவாகியுள்ள இரண்டாவது படம் 'வில்லு'. இந்தியில் கமர்ஷியல் ஹிட் அடித்த 'சோல்ட்ஜர்' ஐ தமிழுக்கு தகுந்தவாறு மாற்றியிருக்கிறார்கள்... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - மூளையை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்று அல்ஸிமெர். இந்நோய் தாக்கினால் மூளை செயலிழந்து நடைபிணமாய் மாறும் அபாயம் உண்டு.... |
| |
|
|
|
|
|
|
|