|
| அஆஇஈ |
ஏவி.எம். தயாரித்திருக்கும் படம் 'அஆஇஈ'. 'விஐபி', 'சுந்தரபுருஷன்' படங்களை இயக்கிய சபாபதி தட்சிணாமுர்த்தி இப்படத்தை இயக்கி உள்ளார். அனிதா, ஆகாஷ், இளங்கோ, ஈஸ்வரி என்ற நான்கு இளசுகளின் காதல்தான் படத்தின் கதை.
தெலுங்கில் கிருஷ்ணவம்சி இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான சந்தமாமா படத்தின் ரீ-மேக்தான் 'அஆஇஈ'.'காதலிக்க நேரமில்லை' சாயலில் படத்தை எடுத்திருப்பதாக கூறுகிறார் சபாபதி தட்சிணாமுர்த்தி.
விஜய் ஆண்டனி இசையில் மொத்தம் ஆறு பாடல்கள். நவ்தீப் - மோனிகா, அரவிந்த் - சரண்யா மோகன் ஆகியோர் காதலன்- காதலியாக நடித்துள்ளனர்.
படம் ரொமாண்டிக் காமெடியாக இருக்கும் என்றார் சபாபதி. 'யாரடி நீ மோகினி'யில் நயன்தாராவின் தங்கையாக நடித்த சரண்யா மோகனின் திறமையை வெளிக் கொணரும் வகையில் அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.
பாடல் காட்சிகளில் அற்புதமாக நடித்திருக்கிறார்கள் என மோனிகா, சரண்யா மோகன் இருவரையும் புகழ்கிறார், சபாபதி.
படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|