|
| அநீதியைச் சுட்டெரிக்கும் 'தீ' ! | |
'தலைநகரம்', 'சண்டை' என அதிரடி வகையறா திரைப்படங்களில் முத்திரைப் பதிக்க முயற்சித்துவரும் சுந்தர்.சி-யின் அடுத்தப் படைப்பு 'தீ'.
பழைய வெற்றிப் படங்களுக்குப் புதிய முலாம் பூசிவரும் இந்த யுகத்தில், இந்தப் படத்துக்கும், ரஜினிகாந்த் நடித்த 'தீ' படத்துக்கும் தலைப்பைத் தவிர எவ்வித சம்மந்தமுமில்லை.
என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் சுந்தர் சி-யை அரசியல்வாதிகள் பந்தாட, காக்கியைத் துறந்து கதருக்கு அவர் மாறுகிறார். அவருக்கு அரசியலில் உதவி செய்பவராக நமீதாவும், அவருடைய மனைவியாக ராகினியும் வலம் வருகின்றனர்.
சுந்தர்.சி எம்.எல்.ஏ. ஆவதற்கு உதவி செய்யும் பாத்திரத்தில் மாளவிகா நடிப்பதாக இருந்தது.ஆனால், அவர் கர்ப்பமாக இருப்பதால் அந்தக் கதாப்பாத்திரம் நமீதாவுக்குச் சென்றது.
அநீதியை தீயைப் போல் சுட்டெரிக்கும் கதாப்பாத்திரத்தில் சுந்தர்.சி நடிப்பதால், இப்படத்துக்கு 'தீ' என்று பெயர் வைத்ததாக விளக்கமளிக்கிறார் இயக்குனரும், தயாரிப்பாளருமான ஜி.கிச்சா.
'தீ' படக்குழு
நடிகர், நடிகையர் : சுந்தர்.சி, நமீதா, ராகினி மற்றும் பலர். சண்டைப் பயிற்சி : தளபதி தினேஷ் பாடல்கள் : யுகபாரதி இசை : ஸ்ரீகாந்த் தேவா ஒளிப்பதிவு : டி. சங்கர் இயக்கம் : ஜி. கிச்சா தயாரிப்பு : ஸ்ரீ மூவி மேக்கர்ஸ் சார்பில் ஜி. கிச்சா, எம். சாகுல் ஹமீது
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய... |
| |
|
|
|
|
 | | WD |
| | | கண்ணும் கண்ணும் | | ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|