|
| நேபாளி : கெட்டப் மட்டுமல்ல; கதைகளும் மூன்று! |
'பழனி'யை தொடர்ந்து பரத் 3 கெட்அப்களில் நடிக்கும் படம் 'நேபாளி'. ஒஎஸ்டி பிலிம்ஸ் இராம.சரவணன் தயாரிக்கும் இப்படத்தை இயக்குகிறார் 'முகவரி' வி.இஸட். துரை.
வித்தியாசமான மூன்று வேடங்களில் நடிப்பதன் மூலம் பரத்துக்கு இது முக்கியமான படமாக அமைகிறது.
நேபாளி, சாஃப்ட்வேர் என்ஜினியர் மற்றும் பிளேபாய் என மூன்று வித்தியாசமான வேடங்களில் கலக்குகிறார் பரத். இதில் ஒரு வேடத்துக்காக 13 கிலோ எடையை ஏற்றியுள்ளார்.
படத்தில் ப்ளே பாய் பரத்துக்கு ஜோடி மீரா ஜாஸ்மின். இன்னொரு பரத்துக்கு ஜோடி 'சர்ச்சை' புகழ் சங்கீதா.
நேபாளி கேரக்டருக்காக ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் பரத். நேபாளியின் தமிழ் உச்சரிப்புக்காக, நிஜ நேபாளி ஒருவரிடம் பயிற்சி எடுத்திருக்கிறார் பரத்.
அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளை விறுவிறுப்பாக அமைத்துள்ளார் ஸ்டண்ட் சிவா. படத்துக்கு வசனம் எழுதியிருப்பவர் பட்டுக்கோட்டை பிரபாகர். முதலிரவு காட்சியில் பரத்துடன் மிக நெருக்கமாக நடித்துள்ளார் மீரா ஜாஸ்மின்.
படத்தில் மூன்று விதமான கதைகள் இடம் பெறுகின்றன.இந்த வித்தியாசமான திரைக்கதை பரபரப்பாக பேசப்படும் என்கிறார் துரை.
பரத் படங்களில் அதிக பொருட் செலவில் எடுக்கப்படும் படமும் இதுதான். அதிக விலைக்கு விற்பனையாகும் படமும் இதுதான்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய... |
| |
|
|
|
|
 | | WD |
| | | கண்ணும் கண்ணும் | | ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|