|
| மகேஷ், சரண்யா மற்றும் பலர் |
'தொட்டால் பூ மலரும்' படத்துக்கு பின்னர் பி.வாசுவின் மகன் சக்தி நடிக்கும் படம் 'மகேஷ், சரண்யா மற்றும் பலர்'. இப்படத்தில் சக்திக்கு ஜோடி 'காதல்' நாயகி சந்தியா.
நமது சமூகத்தில் காதல் என்பது இன்னும் ஒரு விரும்பத்தகாத விஷயமாகத்தான் பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த படத்தில் காதலை ஒரு அன்பின் அடையாளமாக காட்டியிருக்கிறார்களாம்.
இளமை துள்ளும் இப்படத்தில் சக்தி, சந்தியாவுடன் கீர்த்தி சாவ்லா, வினோதினி, சந்தானம், மோகனப் பிரியா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்தில் காதலுக்கு எதிர்ப்பே கிடையாதாம். ஆனாலும் விறுவிறுப்பாக காட்சி அமைப்புகள் இருக்குமாம்.
பா.விஜய், நா.முத்துக்குமார், யுகபாரதி, நெல்லை ஜெயந்தா ஆகியோரின் பாடல் வரிகளுக்கு மிக இனிமையாக இசையமைத்து கொடுத்திருக்கிறார் வித்யாசாகர். ஒளிப்பதிவு, கே. குணசேகரன்.
கூல் புரொடக்சன்ஸ் சார்பில் செண்பககுமார் படத்தை தயாரித்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்குகிறார் பி.வி.ரவி.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | | வெள்ளித்திரை | | திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்... |
|
| |
|
|
|
|
|
| சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|