|
| பாரதிராஜாவின் 'பொம்மலாட்டம்' |
நீண்ட இடைவேளைக்கு பிறகு, பாரதிராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பொம்மலாட்டம்'.
அர்ஜூன் மற்றும் இந்தி நடிகர் நானா படேகர் என இப்படத்தில் இரண்டு ஹீரோக்கள். இவர்களுக்கு ஜோடியாக காஜல் அகர்வால், ருக்மணி என இரண்டு நாயகிகள்.
இதே படம் 'சினிமா' என்ற பெயரில் இந்தியிலும் தயாராகியுள்ளது. இதே நடிகர், நடிகையர்தான் இந்தி படத்திலும் நடிக்கின்றனர்.
இந்தியில் பிரபல இசையமைப்பாளராக திகழும் ஹிமேஷ் ரேஷமய்யா இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு வருகிறார்.
தெற்கத்தி கலைக்கூடம் என்ற நிறுவனத்தின் பெயரில், பாரதிராஜாவின் இரண்டு மருத்துவ நண்பர்கள் இப்படத்தை தயாரிக்கின்றனர்.
ஒரு கொலையின் பிண்ணனியை மையமாக வைத்து சஸ்பென்ஸ் திரில்லாக கதையை அமைத்திருக்கிறார் பாரதிராஜா. இதில், நானா படேகர் இரு சினிமா இயக்குனராகவும், அர்ஜுன் போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளனர்.
சினேகன், தேன்மொழி தாஸ் மற்றும் விவேகா ஆகியோரின் பாடல் வரிகளுக்கு கலக்கலாக இசையமைத்து கொடுத்திருகிறாராம் ஹிமேஷ். பரத் ஹன்னா என்பவர் பின்னணி இசை அமைத்துள்ளார்.
பெர்லினில் உள்ள ஒரு பல்கலைக்கழகம், இப்படத்தின் திரைக்கதையை தங்களது பாடத்திட்டத்தில் ஒரு பாடமாக வைத்துக்கொள்ள தேர்வு செய்துள்ளது என்பது சிறப்புத் தகவல்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | | வெள்ளித்திரை | | திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்... |
|
| |
|
|
|
|
|
| சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|