|
| மோனிகாவின் கவர்ச்சி மழையில் 'சிலந்தி' |
தமிழ் ரசிகர்கள் மத்தியில் இதுவரை குடும்பப் பாங்கான 'அழகி'யாக இடம் பிடித்திருந்த மோனிகா, கவர்ச்சி நாயகியாக களமிறங்கும் படம் 'சிலந்தி'. மலையாளப் படவுலகை சேர்ந்த முன்னா, இப்படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.
கவர்ச்சியாக நடிக்க ஒப்புக்கொண்டதற்காக, படுக்கையறை காட்சிகளிலிருந்து நீச்சல் உடை வரை மோனிகாவை உரித்த கோழியாக்கி கவர்ச்சி விருந்து படைத்திருக்கிறார்கள்.
கோவை வினியோகஸ்தர் சங்கர் இப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்க, பத்திரிகையாளரான ஆதிராஜன் இதில் இயக்குனராகியிருக்கிறார்.
காதல் திரில்லரான இப்படத்தில், ஐந்து நிமிடங்களுக்கு ஒரு சஸ்பென்ஸ் காட்சியை புகுத்தி விறுவிறுப்பாக திரைக்கதை அமைத்துள்ளனர்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் பாண்டிச்சேரியில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. க்ளைமாக்ஸ் காட்சியில் தான் படுகவர்ச்சியாக வருகிறார் மோனிகா. இக்காட்சிக்காக சுமார் 12 மணி நேரம் மோனிகாவை நீச்சல் குளத்தில் நீராட வைத்துள்ளனர்.
பெளசிமா பாத்திமா ஒளிப்பதிவை கவனிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் குழுவில் கீ-போர்டு வாசித்த நீல் முகர்ஜி இசை அமைத்திருக்கிறார்.
இப்படத்தில் ரியாஸ்கான், நெல்லை சிவா, கணேஷ்பாபு உள்ளிட்ட பலரும் இடம் பெற்றுள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | | வெள்ளித்திரை | | திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்... |
|
| |
|
|
|
|
|
| சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|