|
| அறை எண் 305-ல் கடவுள் | |
'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனத்தை ஈர்த்த இயக்குனர் சிம்பு தேவனின் அடுத்த படைப்பே 'அறை எண் 305-ல் கடவுள்'.
சாதாரண மனிதர்களான கஞ்சான கருப்புக்கும், சந்தானத்துக்கும் கடவுள் போல் வந்து உதவுகிறார் பிரகாஷ்ராஜ்.இதுதான் படத்தின் ஒரு வரிக் கதை.திரைக்கதையில் தனது ஆளுமையைக் காட்ட முயன்றிக்கிறார் சிம்பு தேவன் என்கிறது படக்குழு.
ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் முக்கிய அம்சமே 'செட்'டுகள்தான்.இந்தப் படத்துக்கென வித்தியாசமான பல்வேறு அரங்குகள் மிக பிரமாண்டமாகவும், தத்ரூபமாகவும் உருவாக்கப்பட்டுள்ளன.
அதில் ஒன்றுதான் 'நிலா'வைப் போன்ற அரங்கு.இந்த அரங்கை சிறப்பாக வடிவமைத்திருக்கிறார் கலை இயக்குனர் செல்வகுமார்.
இந்த நிலாவில், கஞ்சா கருப்பும், சந்தானமும் ஆடிப் பாடுவதாக காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.இந்தப் பாடல் நல்ல வரவேற்பைப் பெரும் என்று சிம்பு தேவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தக் கடவுளை ரசிகர்கள் அடுத்தமாதம் வெள்ளித்திரையில் தரிசிக்கலாம்!
படக்குழு நடிகர், நடிகைகள் : பிரகாஷ்ராஜ், கஞ்சா கருப்பு, சந்தானம், மதுமிதா, ஜோதிர்மயி, ராஜேஷ், இளவரசு, எம்.எஸ். பாஸ்கர், தலைவாசல் விஜய், மதன்பாப், குயிலி, சம்பத், வி.எம்.சி. ஹனி·பா, டெல்லி கணேஷ், சுகுமார், முத்துக்காளை, பெரியார்தாசன்.
இசை : வித்யாசாகர் பாடல்கள்: முத்துலிங்கம், நா. முத்துக்குமார், பா. விஜய், யுகபாரதி, கபிலன் ஒளிப்பதிவு : எஸ். செளந்தர்ராஜன் படத்தொகுப்பு : ஜி. சசிகுமார் கலை : செல்வகுமார் சண்டைப் பயிற்சி : கிரேட் செல்வா இயக்கம் : சிம்பு தேவன் தயாரிப்பு : இயக்குனர் ஷங்கர்
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : வாரத்தின் முற்பகுதி கொஞ்சம் அலைச்சல் இருக்கும். சேமிப்பு கரையும்.
மாணவர்களின் நினைவாற்றல் பெருகும்... |
| |
|
|
|
|
 | | FE |
| | | சாது மிரண்டா... | | மனதில் ஆக்ரோஷத்தை வைத்துக்கொண்டு அப்பாவியான சாதுவாக மிரட்டிப் பழிவாங்குவதே படத்தின் மையக்கரு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - நெஞ்செரிச்சலால் அவதிப்படுபவர்கள் கண்டிப்பாக கார வகை உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டியது அவசியம்... |
| |
|
|
|
|
|
|
|