|
| மச்சக்காரன் | |
'வாழ்க்கையில் ஆசைப்படுவது எதுவும் கிடைத்திராத ஓர் இளைஞனுக்கும், நினைத்தவை அனைத்தும் எளிதாகக் கிட்டும் ஓர் இளம்பெண்ணுக்கும் உறவு மலர்ந்தால் என்னென்ன நிகழும்?'
இந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை ரசிக்க வேண்டுமானால், 'மச்சக்காரன்' படத்தை கண்டு களியுங்கள்' என்று நம்பிக்கையோடு சொல்கிறார் இயக்குனர் தமிழ்வாணன்.
'கள்வனின் காதலி'யை இயக்கிய தமிழ்வாணன்தான் 'மச்சக்காரனையும்' உருவாக்கி வருகிறார். நாயகனாக 'காக்க காக்க' 'திருட்டுப் பயலே' உள்ளிட்ட படங்களின் மூலம் கோலிவுட்டின் கவனத்தைப் பெற்ற ஜீவனும், 'இதயத் திருடன்' காம்னா நாயகியாகவும் இப்படத்தில் நடிக்கின்றனர்.
காதல் கதையில் தேவையான அளவு சென்டிமென்டுக்காக, நாயகனின் பெற்றோர் கதாபாத்திரத்தில் வினோத்ராஜும், அஞ்சலிதேவியும் நடிக்கின்றனர். அத்துடன் இப்படத்தில் நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் தரப்படுவதால், ரமேஷ் கண்ணா, சுமன் ஷெட்டி, எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி முதலானோர் இடம்பெறுகின்றனர். வில்லனாக வருகிறார் கன்னட சோப்ராஜ்.
மச்சக்காரனுக்கான படப்பிடிப்பு தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் நடக்கவுள்ளது. முதல் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் 16 நாட்கள் நடந்துள்ளதாகவும், ஆஸ்திரேலியாவில் 2 பாடல் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கிறது பட யூனிட்.
யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை மெட்ராய் எண்டெர்டெயின்மென்ட் எனும் புதிய பட நிறுவனம் தயாரிக்கிறது.
படக்குழு
கலை : ரம்யன் படத்தொகுப்பு : ஆண்டனி ஒளிப்பதிவு : ஏ.வெங்கடேஷ் இசை: யுவன்சங்கர் ராஜா இணை தயாரிப்பு : நந்தகோபால் தயாரிப்பு : மெட்ராஸ் எண்டெர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் : தமிழ்வாணன்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|