|
| பிரபாகரன் சாகவில்லை - திரையுலகம் |
பிரபாகரன் இறந்துவிட்டார். போர் முனையில் அவரது உடலை கண்டெடுத்தது இலங்கை ராணுவம்.
இது செய்தி சானல்களில் செய்தியாக வெளியிடப்பட்டது. வீடியோவும், படங்களும் உலகத் தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த செய்தி தமிழ்த்திரையுலகில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியது. 17ஆம் தேதி பேசிய விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான சூசை, தமிழகத்தில் ஈழத்துக்கான போராட்டத்தை இயக்குநர் சீமான் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று குண்டு மழைக்கு நடுவேயிருந்து கேட்டுக் கொண்டார்.
இந்த செய்தியை அறிந்த சீமான் எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறேனே என்று கதறி அழுதார்.
சீமானின் இல்லத்தில் கூடிய இயக்குநர்கள், இலங்கை பிரச்சினை குறித்து தெரிவித்த கருத்துகள், பிரபாகரன் சாகவில்லை இன்னும் உயிருடன்தான் இருக்கிறார் என்ற நம்பிக்கையை பிரதிபலித்தன.
ஈழத் தமிழர்களுக்காக போராடி வரும் பிரபாகரன், துப்பாக்கிக் குண்டுக்கு பலியானார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. உறுதியான சான்றுகள் கிடைக்காதவரை, பிரபாகரன் மரணமடைந்தார் என்று இலங்கை அரசு சொல்வதை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றார் இயக்குநர் சேரன்.
இதே கருத்தை தெரிவித்த இயக்குநர் அமீர், அப்படியே பிரபாகரன் இறந்தது உண்மையென்றால், உலக வரலாற்றில் 18ஆம் நாள் தவறான நாளாக இருக்கும் என்றார்.
ஈழத் தமிழருக்காக பல்வேறு போராட்டங்களை நடத்திய திரையுலகம், பிரபாகரன் இறக்கவில்லை என்ற உண்மையை கேட்க ஆவலாக உள்ளது திரையுலகம்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|