|
| கவுதம் தந்த நம்பிக்கை |
'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தில் கவுதம் பிஸி. அடுத்து அவர் எந்தப் படத்தை இயக்குவார் என்பதில் உலக குழப்பம்.
அல்லு அர்ஜூன் படம், தனது உதவியாளரை வைத்து இயக்கும் படம் என கவுதம் படம் குறித்த வதந்திகளுக்கு குறைவில்லை. அவசர அவசரமாக தொடங்கப்பட்ட 'சென்னையில் ஒரு மழைக்காலமும்' அந்தரத்தில் நிற்கிறது.
சென்னையில் ஒரு மழைக்காலத்தில் நடித்த த்ரிஷாவை ஹீரோயினாக்கித்தான் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை எடுத்த வருகிறார் கவுதம். ஏதோ ஒரு படமாவது முடிந்ததே என்று மழைக்காலம் குறித்து கவலைப்படுவதில்லை த்ரிஷா. ஆனால் மற்றவர்கள் அப்படியில்லையே.
'சரோஜா'வில் நடித்த நிகிதா, சென்னையில் ஒரு மழைக்காலத்தை பெரிதாக நம்பியிருந்தார். திடீரென்று படம் பாதியில் நின்றதில் அவர் அப்செட். விண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்குப் பிறகு கவுதம் புதிய படம் இயக்குகிறார் என்ற செய்தி நிகிதாவை ரொம்பவே கவலைப்படுத்தியிருக்கிறது. இது குறித்து கவுதமிடமே கேட்டிருக்கிறார் நிகிதா.
கதையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. அது முடிந்தால் படப்பிடிப்பை தொடங்க வேண்டியதுதான் என்று நம்பிக்கையளித்திருக்கிறார் கவுதம்.
அந்த மாற்றம் செய்வதற்குள் புதிதாக இரண்டு படங்களை கவுதம் தொடங்கி முடித்து விடுவார் என்பது தெரியாமல், மழைக்காலம் விரைவில் தொடங்கிவிடும் என நம்பிக் கொண்டிருக்கிறார் நிகிதா.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|