|
| மே 22ல் வால்மீகி ஆடியோ |
'சிவா மனசுல சக்தி'யை தயாரித்த விகடன் டாக்கீஸின் அடுத்தப் படைப்பு 'வால்மீகி'. ஒரு செளகரியத்துக்கு அடுத்தப் படைப்பு என்றாலும், சிவா மனசுல சக்திக்கு முன்பே தயாராகிவிட்டது வால்மீகி.
கல்லூரி அகில் ஹீரோ. மீராநந்தன் ஹீரோயின். பிக்பாக்கெட் அகிலுக்கும், பள்ளிக்கூட ஆசிரியர் மீரா நந்தனுக்கும் ஏற்படும் காதலும், அந்தக் காதல் பிக்பாக்கெட் அகிலின் வாழ்க்கையை புரட்டிப் போடுவதும் கதை.
சென்னைப் பின்னணியில் சேரி வாழ்க்கையை செல்லுலாயிடில் செதுக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் அனந்த நாராயணன்.
இளையராஜாவின் இசையில் உருவாகியிருக்கின்றன பாடல்கள். வரும் 22ஆம் தேதி பாடல்களை வெளியிட திட்டமிட்டிருக்கிறது விகடன் டாக்கீஸ். படத்தின் ரிலீஸ் பற்றி கேட்டதற்கு, அடுத்த மாதம் படத்தை ரசிகர்கள் திரையில் பார்க்கலாம் என்றார் அனந்த நாராயணன் உறுதியாக.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|