|
| 'அயனை' பின்னுக்குத் தள்ளிய 'சர்வம்' |
ஆறு வாரங்கள் சென்னை பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தில் இருந்த 'அயனை' பின்னக்கு தள்ளியது 'சர்வம்'. சர்வத்துடன் வெளியான 'பிரம்மதேவா' மற்றும் 'ராஜாதிராஜா'வில், பிரம்மதேவா டாப் 5 பட்டியலிலேயே இல்லை.
5. நியூட்டனின் மூன்றாம் விதி
இரண்டு வாரங்கள் முடிவில் ரூ.44 லட்சங்களை வசூலித்துள்ளது 'நியூட்டனின் மூன்றாம் விதி'. சென்றவார இறுதி மூன்று நாள் வசூல் ரூ.3.28 லட்சம்.
4. பசங்க
பாண்டியராஜின் படத்துக்கு பாராட்டு கிடைத்த அளவு வசூல் இல்லை. இரண்டு வாரங்களில் ரூ.59 லட்சத்தை வசூலித்திருக்கும் இப்படம் வார இறுதியில் ரூ.11 லட்சம் வசூலித்துள்ளது.
3. ராஜாதிராஜா
ராகவா லாரன்சின் படம் சுமாரான ஓபனிங்கையே பெற்றுள்ளது. வெளியான முதல் 3 நாட்களில் ஏறக்குறைய ரூ.12 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளது.
2. அயன்
6 வார இறுதியில் ரூ.6.46 கோடிகளை வசூலித்து சூப்பர் ஹிட் பட்டியலில் சேர்ந்துள்ளது 'அயன்'. சென்றவார வசூல் ஏறக்குறைய 23 லட்சங்கள்.
1. சர்வம்
விஷ்ணுவர்தனின் க்ரைம் த்ரில்லர் முதல் 3 நாட்களில் ஏறக்குறைய ரூ.40 லட்சங்களை வசூலித்து அயனை இரண்டாம் இடத்துக்கு தள்ளியுள்ளது. அதே நேரம் அயனின் முதல் மூன்று நாள் வசூலுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|