|
| சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் ; அயன் முதலிடம் |
சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் அயன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.சர்வம் உள்பட மூன்று படங்கள் வெளியாகியிருப்பதால் அடுத்த வாரம் பாக்ஸ் ஆபிஸில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.
5. மரியாதை
விஜயகாந்தின் மரியாதை பாக்ஸ் ஆஃபிஸில் உரிய மரியாதை பெறாமலே உள்ளது. சென்றவார இறுதி மூன்று நாள் வசூல் 6.75 லட்சங்கள் மட்டுமே. இரண்டு வாரத்தில் 36 லட்சங்களை சென்னையில் வசூல் செய்திருக்கிறது.
4. குரு என் ஆளு
மாதவன் படத்துக்கு வரவேற்பு எதிர்பார்த்ததைவிட குறைவு. வார இறுதியில் 8.9 லட்சங்களையும், மொத்தமாக 56 லட்சங்களையும் இப்படம் வசூலித்துள்ளது. மொத்தமாக 75 லட்சங்களை வசூலித்தால் அதுவே அதிகம்.
3. நியூட்டனின் 3ஆம் விதி
எஸ்.ஜே. சூர்யாவின் விதியை ஓரளவு நன்றாகவே எழுதியிருக்கிறது தாய் முத்துசெல்வனின் முதல் படைப்பு. வார இறுதியில் 9.18 லட்சங்களை வசூலித்திருக்கும் இப்படம், ஒரு வாரத்தில் 32 லட்சங்களை சென்னையில் மட்டும் வசூலித்திருக்கிறது.
2. பசங்க
யதார்த்தமான கதைக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைக்கும் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறது பசங்க. வார இறுதியில் 12.3 லட்சங்களை வசூலித்திருக்கும் இதன் ஒருவார வசூல் 36 லட்சங்கள்.
1. அயன்
சூர்யா படத்துக்கு கூட்டம் இன்னும் குறையவில்லை.வார இறுதியில் மட்டும் ஏறக்குறைய 39 லட்சங்களை வசூலித்து தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.சென்னையில் மட்டும் இதன் மொத்த வசூல் ஏறக்குறைய ஆறு கோடிகள்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஆந்திர மாநிலத்தில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைகிறது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|