|
| தள்ளிப் போகும் பழஸிராஜா ரிலீஸ் |
பதினெட்டாம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த பழஸி மகாராஜாவைப் பற்றிய கதைதான் 'பழஸிராஜா' என்ற பெயரில் திரைப்படமாகிறது.
பழஸிராஜாவாக மம்முட்டியும், அவரது தளபதியாக சரத்குமாரும் நடித்திருக்கிறார்கள்.பழஸிராஜாவே ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்த முதல் வீரன் என்பது மலையாளிகளின் நம்பிக்கை.
மிகுந்த பொருட் செலவில் தயாராகியிருக்கும் இந்த மலையாளப் படத்தை ஐந்து மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள்.அனைத்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிடுவது தயாரிப்பாளரின் திட்டம்.
ஆகஸ்டு மாதம் படம் திரைக்கு வரும் என கூறப்பட்டது.மொழிமாற்றம் செய்ய அதிக நாட்கள் பிடிக்கும் என்பதால் படத்தின் ரிலீஸை தற்போது தள்ளி வைத்துள்ளனர்.ரம்ஜான் அன்று படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பத்மப்ரியா, கனிகா, ஜெகதி ஸ்ரீகுமார் உள்பட ஏராளமானோர் படத்தில் நடித்துள்ளனர்.படத்துக்கு திரைக்கதை எழுதியிருப்பவர் எம்.டி.வாசுதேவன் நாயர்.ஹரிஹரன் படத்தை இயக்கியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஆந்திர மாநிலத்தில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைகிறது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|