யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
நடிகர்களின் ‘முடி’வில்லா பிரச்சனை
'நான் கடவுள்' படத்தில் தொடங்கியது நடிகர்களின் இந்த ‘முடி’வில்லா பிரச்சனை.இந்தப் படத்துக்காக ஆறு மாதங்கள் முடி வளர்த்தார் அ‌ஜித்.பிறகு அவருக்கு பதில் ஆர்யா ஒப்பந்தமானதும், அவரும் அதே ஆறு மாதங்கள் முடி வளர்த்ததும் தெ‌ரிந்த கதை.

நான் கடவுள் படப்பிடிப்பு முடிந்து முடி வெட்டிக் கொண்டதை நண்பர்களுக்கு பிரியாணி விருந்தளித்து விழாவாகவே கொண்டாடினார் ஆர்யா.அப்படியொரு விழா எடுக்க காத்திருக்கிறார்கள் சிலர்.இவர்கள் அமீ‌ரின் 'யோகி' படத்தில் நடிப்பவர்கள்.

கடவுளைப் போலவே இழுத்துக் கொண்டு போகிறது யோகி படப்பிடிப்பும்.இரண்டு வருடங்கள் ஆன நிலையில் இன்னும் படத்தின் கிளைமாக்ஸ் எடுக்கப்படாமலே உள்ளது.

இதில் குப்பத்து தாதாவான அமீ‌ரின் நண்பராக நடித்திருக்கிறார் பாடலாசி‌ரியர் சினேகன்.இந்த கதாபாத்திரத்துக்காக ஒரு வருடத்துக்கும் மேலாக தோள்வரை புரளும் முடியுடன் தி‌ரிகிறார் சினேகன்.இதேபோல் வேறு சிலரும் யோகிக்காக முடி வளர்த்திருக்கிறார்கள்.

முடிக்கு சிக்கெடுத்தே சோர்ந்துபோன இவர்கள், படப்பிடிப்பு எப்போது முடியும்... பார்பர் ஷாப்புக்கு எப்போது செல்வோம் என காத்திருக்கிறார்கள்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
விஜய் - தொடரும் எம்.ஜி.ஆர். மோகம்
கந்தசாமி இசை வெளியீட்டு விழா
மீண்டும் டூயட் மூவிஸில் ராதாமோகன்
வெடிகுண்டு முருகேசனுக்கு யூ
கமல் படத்தில் பிருத்விராஜ்
பேரரசு கேட்ட ஒரு கோடி !
செய்திகள்
தேசியம் - ஆந்திர மாநிலத்தில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைகிறது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...