யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
விஜய் - தொடரும் எம்.ஜி.ஆர். மோகம்
சில வருடங்கள் முன்பு வரை விஜய் தீவிர ரஜினி ரசிகர்.விஜய் எப்போதும் என்னுடைய ரசிகர் என்று ஒருமுறை மேடையிலேயே பெருமைப்பட்டுக் கொண்டார் ரஜினி.

இந்த தலைவர் - ரசிகர் உறவில் தற்பொது விரிசல்.என்னுடைய ஒரே தலைவர் எம்.ஜி.ஆர். என்று கூறத் தொடங்கியிருக்கிறார் விஜய்.தனது படத்தில் 'அன்பே வா' காட்சியை வைத்து எம்.ஜி.ஆரை போலவே நடித்தது, 'வேட்டைக்காரன்' என்று எம்.ஜி.ஆர். படத்தலைப்பை தனது படத்துக்கு வைத்தது என நூறு சதவீத வாத்தியார் ரசிகராக மாறியிருக்கிறார் விஜய்.

ரஜினி ஆன்மீக வழியில் செல்வதால், தனது வருங்கால அரசியல் கனவுக்கு அவர் வழிகாட்ட மாட்டார் என எம்.ஜி.ஆரை தனது குருவாக விஜய் வரித்துக் கொண்டார் என்பது சிலரது கருத்து.தொடர்ந்து அஜித் பட விழாக்களில் ரஜினி கலந்து கொள்வது விஜய்க்கு பிடிக்கவில்லை.அதுதான் இந்த மாற்றம் என்கிறார்கள் வேறு சிலர்.

எப்படியோ... தனது புதிய ரூட்டில் மேலும் முன்னேறிக் கொண்டிருக்கிறார் விஜய்.வேட்டைக்காரனுக்கு அடுத்து தயாராகும் தனது ஐம்பதாவது படத்துக்கும் எம்.ஜி.ஆர். படத் தலைப்பையே வைப்பது என்று முடிவு செய்துள்ளார் விஜய்.

தற்போதைக்கு தேர்வாகியிருக்கும் பெயர், 'உரிமைக்குரல்'.வைப்பது என்று முடிவாகிவிட்டது... அப்புறம் படத்தலைப்பு எதற்கு ? பேசாமல் எம்.ஜி.ஆர். என்றே வைக்கலாமே!
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கந்தசாமி இசை வெளியீட்டு விழா
மீண்டும் டூயட் மூவிஸில் ராதாமோகன்
வெடிகுண்டு முருகேசனுக்கு யூ
கமல் படத்தில் பிருத்விராஜ்
பேரரசு கேட்ட ஒரு கோடி !
இந்தியில் இளையராஜா !
செய்திகள்
தேசியம் - ஆந்திர மாநிலத்தில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைகிறது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...