|
| கந்தசாமி இசை வெளியீட்டு விழா |
படத்தின் வெள்ளி விழாவுக்கு செய்ய வேண்டிய கொண்டாட்டங்களை ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு செய்திருந்தார் தயாரிப்பாளர் தாணு.
வெளிநாட்டு நடனக் கலைஞர்கள், பிரமாண்ட அரங்கு, ஸ்ரேயாவின் ஆட்டம், முப்பது கிராமங்களை தத்தெடுக்கும் நிகழ்ச்சி... திகட்ட திகட்ட நடந்தது கந்தசாமி இசை வெளியீட்டு விழா.
அடுத்தவர்களின் கஷ்டத்தைப் போக்குகிற அனைவருமே கடவுளாகலாம்.படத்தின் ஒன்லைனே இதுதானே என்றார் இயக்குனர் சுசி. கணேசன்.அதற்கேற்ப முப்பது கிராமங்களுக்கு தலா மூன்று லட்சம் நன்கொடை அளித்தது நிறைவான தர்மம்.
தாடி மீசையுடன் வந்திருந்த விக்ரமிடம் உற்சாகம் மிஸ்ஸிங்.அவருக்கும் சேர்த்து விழா நெடுக கைதட்டி சிரித்துக் கொண்டிருந்தார் ஸ்ரேயா.விழாவின் இடையிடையே படத்தின் ட்ரெய்லர், பாடல்களில் கொஞ்சம் என்று ஒளிபரப்பினார்கள். ஒவ்வொரு பிரேமிலும் தயாரிப்பாளரின் பைனான்சும், சுசி. கணேசனின் திறமையும் பளிச்சிட்டன.
இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்துக்கு இசையமைப்பதுடன் நன்றாக பாடவும், ஆடவும் வருகிறது.அடுத்து ஹீரோதானா?
மேடையில் காம்பியரிங் செய்தவர்கள் முதல் மைக்பிடித்த அனைவரும் பார்வையாளர்களைப் பார்த்து, என்ன சரிதானா? சத்தமாக சொல்லுங்க, இன்னும் பலமா கைத்தட்டுங்க என்ற உசுப்பிக் கொண்டிருந்தது சொதப்பல்.அங்க என்ன பாடமா நடத்துறாங்க?
மொத்த கொண்டாட்டங்களில் அதிக சந்தோஷத்துடன் வளைய வந்தவர், அபிராமி ராமநாதன்.படத்தின் ட்ரெய்லர், பாடல்களைப் பார்த்து பரவசப்பட்டவர், ரொம்ப... ரொம்ப சந்தோஷமா இருக்கேன் என்று மைக்கிலேயே அறிவித்தார்.
காரணம், கந்தசாமியை இவர்தான் வாங்கியிருக்கிறார். படம் வெளியானதும், ஆளுக்கு நாலுபேரை அழைத்துக் கொண்டு படம் பார்க்கச் சொல்லுங்கள் என்று அந்த உற்சாகத்திலும் மறக்காமல் கேட்டுக் கொண்டார், பிஸினஸ்!
படத்தில் ஸ்ரேயா அணிந்த காலணியின் விலை மூன்றரை லட்சம் என்று கொசுறு தகவல் ஒன்று கூறப்பட்டது.ஒரு கிராமத்தை தத்தெடுக்கும் பணத்தைவிட இது அதிகம்.பிஸினசில் இதெல்லாம் சாதரணமப்பா!
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஆந்திர மாநிலத்தில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைகிறது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|