|
| அம்பாசமுத்திரம் செல்லும் முரட்டு சிங்கம் |
| புதன்கிழமை, 13 மே 2009 ( 17:25 IST ) | |
முதல்கட்ட படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பிய 'இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்' யூனிட், இரண்டாம்கட்ட படப்பிடிப்புக்காக விரைவில் அம்பாசமுத்திரம் செல்கிறது.
சிம்புதேவனின் மூன்றாவது படமான இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், பதினெட்டாம் நூற்றாண்டு கெளபாய் கதை.பழைய ஜெய்சங்கர் படங்களின் தொடர்ச்சி.கால் செஞ்சுரி ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் தயாராகும் கெளபாய் படம் என்பது இதன் சிறப்பு.
பாலக்காடு பகுதியில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து முதல்கட்ட படப்பிடிப்பை நடத்தினார் சிம்புதேவன்.படத்தின் நாயகன் லாரன்ஸ், எம்.எஸ். பாஸ்கர் முதலான நடிகர்கள் இதில் கலந்துகொண்டனர்.
இரண்டாம்கட்ட படப்பிடிப்புக்காக டெக்சாஸ் மாநில மரத்தாலான வீடுகளும் பிரமாண்ட அரங்குகளும் அம்பாசமுத்திரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.வரும் 20 ம் தேதி படப்பிடிப்புக்காக அம்பாசமுத்திரம் கிளம்பிச் செல்கிறது முரட்டு சிங்கம் யூனிட்.
கல்பாத்தி எஸ் அகோரம் படத்தை தயாரிக்கிறார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - இலங்கையின் வன்னி பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிறுவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்தப் போரினால் சிறுவர்கள் ஆபத்தான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என ஐ.நா.வின் குழந்தைகள் பாதுகாப்பு நல அமைப்பான... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|