|
| தோரணையில் காமெடி ஹீரோ : விஷால் |
இம்மாதம் 21 ம் தேதி 'தோரணை' ரிலீஸ்.'மலைக்கோட்டை'க்குப் பிறகு தோரணையில் காமெடியும், ஆக்சனும் கலந்த வேடம் விஷாலுக்கு.ஜோடி ஸ்ரேயா.படம் விரைவில் திரைக்கு வருவதையடுத்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார் விஷால்.
தோரணை படத்தைப் பற்றி குறிப்பிட்டவர், இந்தப் படத்தில் ஆக்சன் ஹீரோவாக இருந்த நான் காமெடி ஹீரோவாகியிருக்கிறேன்.இது எனக்குப் பரீட்சை மாதிரி.இதில் வெற்றி பெற்றால் முழு நடிகனாகிவிடலாம்.இந்தப் படத்தில் சந்தானம், மணிசர்மா ஆகியோருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
தோரணை இயக்குனர் சபா ஐயப்பனை படப்பிடிப்பில் விஷால் அடித்துவிட்டதாக வதந்தி.அதனை திட்டவட்டமாக மறுத்தார் விஷால்.' திமிரு' இயக்குனர் தருண் கோபிக்கு பேசிய சம்பளம் தனக்கு கொடுக்கப்படவில்லை என்று புகார் கூறியிருந்தார். அதுபற்றிய கேள்விக்கு பதிலளித்தவர், சம்பளம் தரவில்லையென்றால் அப்போதே கேட்பதுதானே.இப்போது ஏன் கேட்கிறார் என்று புரியவில்லை என்றார்.
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் சபா ஐயப்பனும் உடனிருந்தார்.இயக்குனர்களின் பணியில் நீங்கள் தலையிடுவது உண்மையா என்ற மற்றொரு கேள்விக்கு பதிலளித்த விஷால், எனது ஒவ்வொரு படமும் எனக்கு குழந்தை மாதிரி.அதன் வளர்ச்சியில் எனக்கு அக்கறை உண்டு.மேலும் சினிமா என்பது கூட்டு முயற்சி.இதில் யோசனைகள் கூறுவதை தலையீடாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - இலங்கையின் வன்னி பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிறுவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்தப் போரினால் சிறுவர்கள் ஆபத்தான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என ஐ.நா.வின் குழந்தைகள் பாதுகாப்பு நல அமைப்பான... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|