|
| துரோகியில் பூஜா |
சும்மா இருந்தாலும் சுமாரான கதாபாத்திரங்களை ஏற்றுக் கொள்வதில்லை! - நான் கடவுளுக்குப் பிறகு பூஜா ஏற்றிருக்கும் புதிய கொள்கை இது !
தயாரிப்பாளர்கள் பலர் அட்வான்ஸ் கொடுத்தும் நாசூக்காக அதனை மறுத்த பூஜா, 'துரோகி' படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை விரும்பி ஏற்றிருக்கிறார்.இத்தனைக்கும் 'துரோகி' யில் பூஜாவையும் சேர்த்து மூன்று ஹீரோயின்கள்.
மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்த சுதாவின் முதல் படம் 'துரோகி'.பெண் இயக்குனர்கள் மென்மையான கதைகளையே இயக்குவார்கள் என்ற இலக்கணத்தை உடைக்கும்படி உருவாக்கியிருக்கிறாராம் துரோகி கதையை.ஸ்ரீகாந்த், விஷ்ணு என படத்தில் இரண்டு ஹீரோக்கள்.
பூஜாவுடன் பூர்ணாவும் துரோகியில் நடிக்கிறார்.மூன்றாவது நடிகைக்கான தேடல் நடந்து வருகிறது.
போலீஸ் போலீஸ் படத்திலும், மா படத்திலும் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடிக்கும் ஸ்ரீகாந்த், துரோகி கதை பிடித்துப்போய் இதிலும் விஷ்ணுவுடன் திரையை பகிர்ந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - இலங்கையின் வன்னி பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிறுவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்தப் போரினால் சிறுவர்கள் ஆபத்தான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என ஐ.நா.வின் குழந்தைகள் பாதுகாப்பு நல அமைப்பான... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|