யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
விஜயகாந்த் படத்துக்கு திடீர் சிக்கல்
விஜயகாந்த் நடிப்பில் தயாராகியுள்ள 'எங்கள் ஆசான்' படத்தை வெளியிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

யுவஸ்ரீ கி‌ரியேஷன்ஸ் தங்கரா‌ஜ் தயா‌ரிப்பில், கலைமணி இயக்கியிருக்கும் படம் 'எங்கள் ஆசான்'. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தை வெளியிட அனைத்து வேலைகளும் நடந்து வந்தன.

ஆனால், திடீரென 'மெட்ரோ ஆடியோ' நிறுவனத்தின் உ‌ரிமையாளர் காஜா மொய்தீன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

மெட்ரோ ஆடியோ நிறுவனத்திடம் 'எங்கள் ஆசான்' தங்கரா‌ஜ், ரூ. 49 லட்சத்து 50 ஆயிரம் வாங்கிவிட்டு திருப்பித்தரவில்லையாம். பணத்தை தரும்வரை 'எங்கள் ஆசான்' படத்தை வெளியிட‌த் தடை விதிக்க வேண்டும் என்று, அந்த மனுவில் காஜா மொய்தீன் குறிப்பிடப்பட்டிருந்தார்.

இதேபோல் செவன்த் சானல் மாணிக்கம் நாராயணன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'தங்கரா‌ஜ் 11 லட்சம் தர வேண்டும், பணத்தை செட்டில் செய்யும் வரை படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது' என குறிப்பிடப்பட்டிருந்தது.

வழக்கை விசா‌ரித்த நீதிபதி, வரும் 21 ஆம் தேதி வரை படத்தை வெளியிட இடைக்கால‌த் தடை விதித்து உத்தரவிட்டார்.

இதனால் 'எங்கள் ஆசான்' வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கிளாமருக்கு மாறுகிறார் கார்த்திகா
பாரில் காதலைச் சொன்ன ஹீரோயின்
அனுஷ்காவுக்கு அடித்த யோகம்
இயக்குனர்களை தலைவலி தரும் ஹீரோக்கள்
ஸ்ரீகாந்த் தேவா நடத்திய கடற்கரை கச்சேரி
சினேகன் எழுதிய 'காதல் பூச்சாண்டி' பாடல்
செய்திகள்
தமிழகம் - இந்தியா தனது உளவு அமைப்பான 'ரா' மூலம் உளவு விமானத்தை முல்லைத் தீவுக்கு அனுப்பி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைக் கண்காணித்து காட்டிக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாற்றியுள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - மூளையை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்று அல்ஸிமெர். இந்நோய் தாக்கினால் மூளை செயலிழந்து நடைபிணமாய் மாறும் அபாயம் உண்டு....
மேலும் படிக்க|மேலும்...