|
| புத்தாண்டில் 'டாப்-5' திரைப்படங்கள் |
1. சிலம்பாட்டம்
இந்த புத்தாண்டின் முதல் ஆச்சரியம், சிம்பு படமான 'சிலம்பாட்டம்' முதல் இடத்தை பிடித்திருப்பது தான்.
இப்படத்தில் இடம்பெறும் 'வேர் இஸ் த பார்ட்டி...' தற்போது பட்டித்தொட்டி எங்கும் கலக்குவதால், ஆபாசம், அருவெறுப்பு என்ற பல்வேறு விமர்சனங்களையும் தாண்டி சிலம்பாட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
இப்படத்தின் சென்றவார வசூல் ரூ.28 லட்சத்தை தாண்டிவிட்டது. சென்னையில் மட்டும் ரூ.2 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
2. அபியும் நானும்
கதை, திரைக்கதை, நடிப்பு, வசனம், இயக்கம் என அனைத்தும் நன்றாக இருந்தும் போதிய விறுவிறுப்பு இல்லாததால் சராசரி வசூலையே குவித்துள்ளது அபியும் நானும். என்றாலும் புத்தாண்டு 'டாப்-5' பட்டியலில் 2வது இடத்தை பிடித்திருப்பது பெருமையான விஷயம் தான். இப்படத்தின் சென்னை நகர வசூல் ரூ.12.75 லட்சம்.
3. திண்டுக்கல் சாரதி
காமெடி கருணாஸ் கதாநாயகன் அவதாரம் எடுத்திருக்கும் படம். காமெடியும், சென்டிமெண்டும் சரிவிகிதத்தில் கலந்த இந்தப் படத்தின் பெரிய பலம் சன் பிக்சர்ஸின் விளம்பரம். இதுவரை சென்னையில் ரூ.48 லட்சம் வசூலித்திருக்கும் இப்படத்தின் சென்றவார வசூல் ரூ.9.84 லட்சம்.
4. பஞ்சாமிர்தம்
புராண கதாபாத்திரங்களை நிகழ்காலத்தில் உலவவிட்டுள்ளார் ராஜு ஈஸ்வரன். குழந்தைகளை குறிவைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால் ரசிகர்களிடையே சராசரி வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் சென்ற வாரம் சென்னையில் வசூல் செய்தது சுமார் ஆறரை லட்சம்.
5. வாரணம் ஆயிரம்
சூர்யாவின் சின்சியர் நடிப்பில் உருவான இப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனினும் பொறுமையை சோதிப்பதாக விமர்சனம் எழுந்ததால், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றே கூறலாம். சென்ற வார இறுதியில் சென்னையில் மட்டும் இப்படம் வசூலித்த தொகை ரூ.3 லட்சத்து 92 ஆயிரம்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|